கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

சந்திரனுக்கும் மலைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI CHANTHIRANUM MALAIYUM MOON & MOUNTAIN

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து
விளக்கம்
சந்திரன் நிலாவாக விளங்குகிறது. 
நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. 
தலைக்கு மேல் தோன்றி வருகிறது.

மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்குகளோடு காணப்படுகிறது. 
நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. 
சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். 
நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது.

தமிழ்த்துகள்

Blog Archive