கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

பனைமரத்துக்கும் வேசைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI PANAIMARAMUM VESAIYUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து
விளக்கம்
பனைமரம் – 
பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும் ஏறுவர். 
எட்டி அதன் பன்னாடையை இழுத்து எறிவர். 
முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால் அதன் கள்ளை அருந்துவர்.

வேசை என்னும் பொதுமகள் – 
வேசையரைக் கட்டித் தழுவுவர். 
காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறுவர். 
எட்டிப் பிடித்து அவளது பன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர். 
முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ள எச்சில் கள்ளை அருந்துவர்.

தமிழ்த்துகள்

Blog Archive