காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபாடல்
பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இருகாத தந்தி யுருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களப நெடுஞ்சுனையிற்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனேவிளக்கம்பறவாத தும்பி கருகாத வெங்கரி பண் புரண்டே இருகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல் நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில் பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே.
தும்பி, கரி, தந்தி, மாதங்கம், இந்து, சிந்துரம், களபம், ஆம்பல், வலஞ்சுழி ஆகிய சொற்கள் யானையையும், ஆனைமுகக் கடவுளையும் குறிக்கும். இதனைப் புலவர் இப்படித் தெளிவுபடுத்துகிறார்.
தும்பி பறக்கும். இந்தத் தும்பி பறக்காது | பறவாத தும்பிகரி என்பது சான்று. இந்தக் கரி கருதாத ஒன்று | (வெம் = கொடிய) கருகாத வெங்கரிதந்தி என்பது யாழ் நரம்பு. இதில் பண் புரண்டு இருகும். யானையாகிய தந்தியில் பண் புரண்டு இருகாது | பண் புரண்டே இருகாத தந்திபெரிய தங்கம் உருகும். இந்த மாதங்கம் உருகாது | உருகாத மாதங்கம்இந்து என்பது நிலா. இது நிலா அன்று | இந்துசிந்துரமாகிய குங்குமம் நெற்றியில் நிற்கும். யானையாகிய சிந்துரம் நெற்றியில் நிற்காது | நுதல் நிறவாத சிந்துரம்களபம் என்பது சந்தனம். இது பூசாத களபம் | பூசாக் களபம்ஆம்பல் சுனையில் பூக்கும். ஆம்பலாகிய யானை சுனையில் பிறக்காது | நெடும் சுனையில் பிறவாத ஆம்பல்வலஞ்சுழி என்பது சிவபெருமானை வலம்வந்த யானை | வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே