காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபாடல்
கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்வெற்றிலையும் வேசையாமே.
விளக்கம்
வெற்றிலை – விற்போர் கையால் கொள்ளும் நீரால் குளிப்பாட்டப்படும். கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக் கிள்ளுவர். கவுளி கவுளியாக அடுக்கிக் கட்டி வைக்கப்படும்.
வேசை என்னும் விலைமகள் – வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள். குளித்துவிட்டு உலாத்துவாள். அவள் மேல் ஏறிக்கொண்டு அவள் அழகு மேனியை ஆசையாகக் கிள்ளுவர்.