அளவுகளைக் கொண்டமைந்த ஒரு தமிழ்ப் பாடல்.
முக்காலுக்கு ஏகாமுன்
முன் அரையில் வீழாமுன்
அக்கால், அரைக் கால் கண்டு அஞ்சாமுன்
விக்கி இருமாமுன்
மாகாணிக் கேகாமுன்
கச்சி ஒரு மாவின் கீழரை இன்று ஓது
பொருள்
முக்காலுக்கு ஏகா முன் - தள்ளாமையால் மூன்றாவது காலாகக் கைத்தடியை நாடு முன் ,
முன் நரையில் வீழா முன் - தலையில் நரை முடி தோன்றும் முன்,
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - காலனின் கால் நம்மை நாடி வரும் முன்,
விக்கி இருமாமுன் விக்கல், இருமல் இவைகளால் துன்பப்படும் முன்னால்,
மாகாணிக்கு ஏகாமுன் - இறுதி யாத்திரைக்குச் செல்லா முன்
கச்சி ஒரு மாவின் கீழரை கச்சியில் - மாமரத்தின் கீழ் உள்ள சிவனை
இன்று ஓது - இன்றே வணங்கு !
அது சரி ! கணக்கு/அளவு எங்கே ?
பாடலை மீண்டும் பாருங்கள்
ஒன்றை விட சிறிய பின்னங்கள் !
(இறங்கு வரிசையில்)
முக்கால் 3/4
அரை 1/2
கால் 1/4
அரைக்கால் 1/8
இருமா 1/10
மாகாணி 1/16
ஒரு மா 1/20
கீழரை 1/256