பாடல்
விளக்கம்
- கூத்தியார் என்னும் வைப்பாட்டி –
- கடியதாய் (விரைவாக) ஓடிவிடுவாள்.
- கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள்.
- எல்லாரிடத்திலும் காதல் சேட்டை செய்வாள்.
- ஆசையுடன் காப்பாற்றும்போதே குட்டிவிடுவாள்.
- கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தெட்டி (தெற்றி)ப் பறித்துக்கொள்வாள்.
- குரங்கு –
- விரைவாக ஓடும்.
- தான் உள்ள வரையை (மலையை) விரும்பும்.
- எவராயிருந்தாலும் சேட்டை செய்யும்.
- விருப்பத்துடன் காக்கும்பொருட்டுத் தன் குட்டியைப் பற்றிக் கட்டிக்கொள்ளும்.
- பிறரிடமுள்ள பொருளைத் தெட்டிப் பறித்துக்கொள்ளும்.