கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 16, 2020

நாலடியார் NAALADIYAAR

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். 

இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. 

இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 

'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. 

பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான  திருக்குறளுக்கு  இணையாகப்  பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி;பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

வாழ்க்கையின் எளிமையான பொருட்களை  உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. 

இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

நாலடியார் மூலமும் உரையும்  பார்க்க/படிக்க


தமிழ்த்துகள்

Blog Archive