கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI PAAMBUM VAAZHAI PAZHAMUM SNAKE & BANANA

காளமேகப்புலவர் - KAALAMEGA PULAVAR
பாடல்
நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

விளக்கம்

பாம்பிடம் நஞ்சு இருக்கும். 
பாம்பு தன் தோலை உரிக்கும். 
சிவபெருமான் முடிமேல் இருக்கும். 
கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.

வாழைப்பழம் நைந்துபோயிருக்கும். 
வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். 
சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். 
கொடிய பசியோடு இருக்கும் ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது.

தமிழ்த்துகள்

Blog Archive