கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 16, 2020

ஏலாதி YELATHI

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி.
சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். 
திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. 
ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.
இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது.  இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

தமிழ்த்துகள்

Blog Archive