நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று.
இது ஒரு நீதி நூல்.
விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.
இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக் கடிகை என்று அழைக்கப்படுகிறது.
இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன.
இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.