பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.
சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.
இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
- கல்வி (10)
- கல்லாதார் (6)
- அவையறிதல் (9)
- அறிவுடைமை (8)
- ஒழுக்கம் (9)
- இன்னா செய்யாமை (8)
- வெகுளாமை (9)
- பெரியாரைப் பிழையாமை (5)
- புகழ்தலின் கூறுபாடு (4)
- சான்றோர் இயல்பு (12)
- சான்றோர் செய்கை (9)
- கீழ்மக்கள் இயல்பு (7)
- கீழ்மக்கள் செய்கை (17)
- நட்பின் இயல்பு (10)
- நட்பில் விலக்கு (8)
- பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் (7)
- முயற்சி (13)
- கருமம் முடித்தல் (15)
- மறை பிறர் அறியாமை (6)
- தெரிந்து செய்தல் (13)
- பொருள் (9)
- பொருளைப் போற்றுதல் (8)
- நன்றியில் செல்வம் (14)
- ஊழ் (14)
- அரசியல்பு (17)
- அமைச்சர் (8)
- மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
- பகைத்திறம் (26)
- படைவீரர் (16)
- இல்வாழ்க்கை (21)
- உறவினர் (9)
- அறம் செய்தல் (15)
- ஈகை (15)
- வீட்டு நெறி (13)