காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபாடல்
கொம்பிலையே தீனிதின்னுங் கொண்டகான்மேல் வெட்டுதலால்அம்புவியி னன்னடைய தாதலால் – உம்பர்களும்தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்ஆடுங் குதிரையுநே ராம் விளக்கம்
குதிரை – குதிரைக்குக் கொம்பு இல்லை. தீனி தின்னும். கொண்டிருக்கும் காலை மேலே தூக்கி வெட்டிக் காட்டி ‘வெட்டுங்குதிரை’ என்று விழாக்கால இறைவன் ஊர்திக் குதிரை பெயர் பெறும். நிலவுலகில் நல்ல நடை இதற்கு உண்டு.
ஆடு – கொம்பிலுள்ள இலைகளைத் தின்னும். தன் காலை மேலே தூக்கி வெட்டி உயரத்தில் இருக்கும் இலை-தழையைத் தின்னும். நன்னடத்தை உடையது.