கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

நாய்க்கும் தேங்காய்க்கும் இரட்டுறமொழிதல் SILEDAI NAAYUM THENGAYUM DOG & COCONUT

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு
விளக்கம்
சேடி = தோழி 
வாய் = வாய், இடம்; 
உள்வாய் = வாயின் உள், உட்பக்கம்; 
குலை = வாலைக்குலை, தேங்காய்க்குலை; 
வரை = மலை;

நாயானது ஓடும். இருக்கும். 
அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். 
நம்மை நாடி வரும். 
வாலைக் குலைத்து வருவதற்கு வெட்கப்படாது.

தேங்காயில் ஓடும் இருக்கும். 
தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். 
தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.

தமிழ்த்துகள்

Blog Archive