காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
தாதீது தோதீது தத்தை தூதோதாது
தூதிதூ தொத்தி தத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்தித்தேத் தொத்தீது
தித்தித் ததோதித் திதி விளக்கம்
பாடல்
தூதிதூ தொத்தி தத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்தித்தேத் தொத்தீது
தித்தித் ததோதித் திதி
-
- தாதீ துதோ தீது | தத்தை தூதோ தாது | தூது இது | ஊது ஒத்து இதத் தூது | அதே தாது ஒத்தது | இத்து இதத்து | ஆது ஏது தித்தித்து | ஏத்து ஒத்து | ஈது தித்தித்தது | ஓதித் திதி
- த-வரிசை எழுத்துகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட பொருள் பொதிந்த வெண்பா.
- தாதீ! (தோழியே) என் தலைவனிடம் சொல்லும் உன் தூதோ தீது.
- தத்தை (கிளி) தூதோ தாது (மூலப்பொருள் போன்றது).
- தூது என்பது கிளித் தூதுதான்.
- இதமான தூதாகிய இதனை ஊது (ஓது).
- அதே தாதுப் பொருள் போல் எனக்கு ஒத்தது.
- இது என் தலைவன் உள்ளத்தை இத்துப் போகச் செய்து இதமாக்க வல்லது.
- அதைவிட (ஆது) ஏது தித்தித்தது (தித்தித்து)?
- ஒத்துக்கொண்டு இதனை ஏத்து (போற்று).
- ஈது (இதுதான்) தித்தித்தது.
- இதனை ஓதித் திதி (திதி = நினைவுநாள் | அவரை நினைக்கும்-நாள் கடமையைச் செய்)