காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபாடல்
வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான்சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்தமுகுந்தனுமே யகும் முறம்.விளக்கம்
உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான்.
முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது.