கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 29, 2020

அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் AGAPORUL KALAICHOL VILAKKAM

(1)    முதற்பொருள் :
நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

(2)    சிறு பொழுது :
ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

(3)    பெரும் பொழுது :
ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்

(4)    கருப்பொருள் :
ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

(5)    உரிப்பொருள் :
ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

(6)    நிமித்தம் :
அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

(7)    கைகோள் :
தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

(8)    களவு :
மறைமுகக் காதல் வாழ்க்கை

(9)    கற்பு :
வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை

(10)    கைக்கிளை :
தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்

(11)    பெருந்திணை :
பொருத்தம் இல்லாத காதல்

(12)    குறிப்பறிதல் :
தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

(13)    இயற்கைப் புணர்ச்சி :
தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.

(14)    இடம் தலைப்பாடு :
தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.

(15)    பாங்கன் கூட்டம் :
தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(16)    பாங்கியிற் கூட்டம் :
தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(17)    உள்ளப் புணர்ச்சி :
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.

(18)    மெய்யுறு புணர்ச்சி :
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை

(19)    பூத்தரு புணர்ச்சி :
தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

(20)    புனல் தரு புணர்ச்சி :
தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

(21)    களிறு தரு புணர்ச்சி :
தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

(22)    மதியுடன்பாடு :
தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.

(23)    நேர்தல் :
பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

(24)    முன்னுற உணர்தல் :
தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.

(25)    குறையுற உணர்தல் :
தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.

(26)    சேட்படை :
தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

(27)    குறைநயப்பித்தல் :
தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.

(28)    மடல் :
பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.

(29)    மடல் கூற்று :
தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.

(30)    மடல் விலக்கு :
தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.

(31)    குறி இடம் :
தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

(32)    பகற்குறி :
பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

(33)    இரவுக் குறி :
இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

(34)    குறி இடையீடு :
தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

(35)    அல்லகுறிப் படுதல் :
இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

(36)    அறத்தொடு நிற்றல் :
தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

(37)    முன்னிலை மொழி :
ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.

(38)    முன்னிலைப் புறமொழி :
ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.

(39)    இற்செறிப்பு :
தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.

(40)    அறப்புறம் காவல் :
அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.

(41)    வாயில்கள் :
தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.

(42)    வரைவு கடாதல் :
தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.

(43)    வரைவு மலிதல் :
திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.

(44)    ஆற்றாமை :
தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.

(45)    உவர்த்தல் :
தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.

(46)    செலவு அழுங்குதல் :
தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.

தமிழ்த்துகள்

Blog Archive