கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 16, 2020

உதயணகுமார காவியம் UTHAYANA KUMARA KAVIYAM

உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.

இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.

  • இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.

உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது.
கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.

உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.

பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ.வே.சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.


தமிழ்த்துகள்

Blog Archive