கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 29, 2020

எட்டுவரையா - தமிழ்ச் சொல்லின் எட்டு விதமான பொருள்களும் விளக்கமும் தமிழ் மொழியின் சிறப்பு ONE TAMIL WORD EIGHT MEANING TAMILIN SIRAPPU

1) எட்டு +வரையா 
எட்டு மலைகளா
எட்டு கின்ற மலைகளா
எட்டு வரையிலுமா
எட்டு கோடுகளா
2) எள்+துவரை+ஆ
எள்ளும் துவரையும் பசுவும்
3) எட்டு +வரை+ஆ
எட்டு மலைப் பசுக்கள்
4) எள்+துவரையா
எள்ளும் துவரையுமா
5) எள்+துவரையா 
இகழப்படும் துவரையா
6) எட்டுவர்+ஐயா
அடைவர் ஐயா
7) எள்+துவரை+யா
எள்ளும் துவரையும் யா மரமும்
8)எள்+துவர்+ஐயா 
எள்ளானது துவர்ப்பாக உள்ளது ஐயா

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு

முக்காலுக்கு ஏகாமுன் - அளவுகளைக் கொண்டமைந்த ஒரு தமிழ்ப் பாடல் MUKKAALUKKU TAMIL SONG OLD UNITS

அளவுகளைக் கொண்டமைந்த ஒரு தமிழ்ப் பாடல்.

முக்காலுக்கு ஏகாமுன்

 முன் அரையில் வீழாமுன்

அக்கால், அரைக் கால் கண்டு அஞ்சாமுன் 

விக்கி இருமாமுன்

மாகாணிக் கேகாமுன்

கச்சி ஒரு மாவின் கீழரை இன்று ஓது

பொருள்

முக்காலுக்கு ஏகா முன் - தள்ளாமையால் மூன்றாவது காலாகக் கைத்தடியை நாடு முன் ,

முன் நரையில் வீழா முன் - தலையில் நரை முடி தோன்றும் முன்,

அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் -  காலனின் கால் நம்மை நாடி வரும் முன்,

விக்கி இருமாமுன் விக்கல், இருமல் இவைகளால் துன்பப்படும் முன்னால்,

மாகாணிக்கு ஏகாமுன் - இறுதி யாத்திரைக்குச் செல்லா முன் 

கச்சி ஒரு மாவின் கீழரை கச்சியில் -  மாமரத்தின் கீழ் உள்ள சிவனை 

இன்று ஓது - இன்றே வணங்கு !

அது சரி ! கணக்கு/அளவு  எங்கே ? 

பாடலை மீண்டும் பாருங்கள்

ஒன்றை விட சிறிய பின்னங்கள் ! 
(இறங்கு வரிசையில்)

முக்கால் 3/4

அரை 1/2

கால் 1/4

அரைக்கால் 1/8

இருமா 1/10

மாகாணி 1/16

ஒரு மா 1/20

கீழரை 1/256

அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் AGAPORUL KALAICHOL VILAKKAM

(1)    முதற்பொருள் :
நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

(2)    சிறு பொழுது :
ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

(3)    பெரும் பொழுது :
ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்

(4)    கருப்பொருள் :
ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

(5)    உரிப்பொருள் :
ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

(6)    நிமித்தம் :
அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

(7)    கைகோள் :
தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

(8)    களவு :
மறைமுகக் காதல் வாழ்க்கை

(9)    கற்பு :
வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை

(10)    கைக்கிளை :
தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்

(11)    பெருந்திணை :
பொருத்தம் இல்லாத காதல்

(12)    குறிப்பறிதல் :
தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

(13)    இயற்கைப் புணர்ச்சி :
தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.

(14)    இடம் தலைப்பாடு :
தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.

(15)    பாங்கன் கூட்டம் :
தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(16)    பாங்கியிற் கூட்டம் :
தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(17)    உள்ளப் புணர்ச்சி :
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.

(18)    மெய்யுறு புணர்ச்சி :
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை

(19)    பூத்தரு புணர்ச்சி :
தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

(20)    புனல் தரு புணர்ச்சி :
தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

(21)    களிறு தரு புணர்ச்சி :
தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

(22)    மதியுடன்பாடு :
தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.

(23)    நேர்தல் :
பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

(24)    முன்னுற உணர்தல் :
தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.

(25)    குறையுற உணர்தல் :
தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.

(26)    சேட்படை :
தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

(27)    குறைநயப்பித்தல் :
தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.

(28)    மடல் :
பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.

(29)    மடல் கூற்று :
தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.

(30)    மடல் விலக்கு :
தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.

(31)    குறி இடம் :
தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

(32)    பகற்குறி :
பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

(33)    இரவுக் குறி :
இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

(34)    குறி இடையீடு :
தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

(35)    அல்லகுறிப் படுதல் :
இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

(36)    அறத்தொடு நிற்றல் :
தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

(37)    முன்னிலை மொழி :
ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.

(38)    முன்னிலைப் புறமொழி :
ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.

(39)    இற்செறிப்பு :
தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.

(40)    அறப்புறம் காவல் :
அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.

(41)    வாயில்கள் :
தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.

(42)    வரைவு கடாதல் :
தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.

(43)    வரைவு மலிதல் :
திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.

(44)    ஆற்றாமை :
தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.

(45)    உவர்த்தல் :
தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.

(46)    செலவு அழுங்குதல் :
தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.

Tuesday, June 23, 2020

சிற்றிலக்கிய வகைகள் 96 SITRILAKKIYA VAKAIKAL NINETY SIX

தொழிற்பெயர் தமிழ் இலக்கணம் வகுப்பு 7 பருவம் 2 இயல் 3 7th tamil ilakanam tholil peyar

ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம் வகுப்பு 7 பருவம் 2 இயல் 2 தமிழ் இலக்கணம் 7th tamil ilakanam pahupatham, pakaapatham, oreluthu orumoli

இலக்கியவகைச் சொற்கள் வகுப்பு 7 பருவம் 2 இயல் 1 தமிழ் இலக்கணம் 7th tamil ilakanam ilakiya vagai sorkal

Friday, June 19, 2020

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் PATHINENKEELKANAKKU NOOLKAL

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் ... இரட்டுறமொழிதல் SILEDAI KAAKKAI KARI SAMAITHU KARUVADU...

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் 

காக்கா கறி சமைச்சி,
கருவாடு  உண்பவர்களா சைவர்கள்.?

இங்குதான்தமிழ் விளையாடுகிறது!!!

இதன் அர்த்தத்தைக் கேளுங்கள் வியந்து போவீர்கள்.

காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான உயிர் வாடும் என்று
உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!

இன்னும் விளக்கிக் கூறவேண்டுமானால்..

"சிவனை மட்டும் வழிபாடு செய்யும் 
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள், 
ஒரு கை அளவிலான காய் கறிகளை எடுத்து  அதில் நான்கில் ஒரு பாகத்தை  மட்டுமே சமைத்து,
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்
கால் வயிறு மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்"
என்றுதெளிவு படுத்தலாம்.

இத்தகைய விரத வாழ்வினால், சிவனடியார்கள்...
எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலைதான் முக்திக்கு வழிகாட்டியான...
தவம், யோகம் போன்றவைகளை சிறப்பாகப் பயில முடியும் என்பது அவர்கள் பயின்றது!

கி.வா.ஜகந்நாதன் அவர்களின் இரட்டுறமொழிதல் கி.வா.ஜ. நகைச்சுவை SILEDAI KI.VA.JA.

கி.வா.ஜ அவர்களின் நகைச் சுவை

கி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்கு
பேச்சாளராகச் சென்றார்.  
அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், "தங்களுக்குப் பூரி பிடிக்குமா? என்று கேட்டார்.
அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப்
பூரி பிடிக்காமல் இருக்குமா?' என்று சொல்ல, அருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச் சிரித்தனர்.

கி வா ஜ உதிர்த்த முத்து

ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. 
ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.

சாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் !!
இங்கே குவளையில் நீர் !!

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். 
அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் பழுதாகி விட்டது. 

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். 
அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. 

கி.வா.ஜ உடனே  *“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர். 

ஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். 
எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. 
அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார். 

பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார்,
*'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!


கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். 
அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.


பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். 

பாராட்டுரை சொல்ல வந்த 
கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, 
*"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.


ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. 
கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். 
அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். 

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். 
அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.

ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள். 

கிவாஜ - 
*இன்னிக்கு வேணாமே!* 
*தொண்டை கம்மியிருக்கு...* என்றார்.. 

அந்தப் பெண் சொன்னாள் - *பரவால்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*

ஒரு தடவை அவருக்குப் போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...

அதற்கு அவரின் கமெண்ட்
*"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது... பிஞ்சும் (கிழிந்தும்)  இருக்கிறது...*

நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முந்நூறு ரூபாய், நானூறு ரூபாய் - புத்திசாலிப் புலவரின் இரட்டுறமொழிதல் SILEDAI ‎

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். 
மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. 
மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். 
புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். 
புலவர் : நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். 
அமரவே இடம் இல்லை, அதைச் சொன்னேன். 
உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 
முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். 
முன், நூறு ரூபாய் என்று அதைச் சொன்னேன். 
300 ரூபாய் வந்தது. 
'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். 
உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். 
இதுதான் நடந்தது. 
மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... இரட்டுறமொழிதல் பாடலும் விளக்கமும் SILEDAI VENKAAYAM SUKKAANAAL...

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.

வேரகச் செட்டியாரே!

சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். 

இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. 

எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. 

இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். 

மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. 

எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.

ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். 

அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். 

இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.

வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!

  • வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
  • சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
  • வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
  • இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
  • சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
  • வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

என்று பொருள்படுகின்றது.

96 வகை சிற்றிலக்கியங்கள் SITRILAKKIYANGAL 96

சிற்றிலக்கிய வகைகள்
  1. அகப்பொருட்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அரசன்விருத்தம்
  5. அலங்காரபஞ்சகம்
  6. அனுராகமாலை
  7. ஆற்றுப்படை
  8. இணைமணி மாலை
  9. இயன்மொழி வாழ்த்து
  10. இரட்டைமணிமாலை
  11. இருபா இருபது
  12. உலா
  13. பவனிக்காதல்
  14. உலாமடல்
  15. உழத்திப்பாட்டு
  16. உழிஞைமாலை
  17. உற்பவமாலை
  18. ஊசல்
  19. ஊர் நேரிசை
  20. ஊர்வெண்பா
  21. ஊரின்னிசை
  22. எண்செய்யுள்
  23. ஐந்திணைச் செய்யுள்,
  24. ஒருபா ஒருபது
  25. ஒலியந்தாதி
  26. கடைநிலை
  27. கண்படைநிலை
  28. கலம்பகம்
  29. காஞ்சிமாலை
  30. காப்புமாலை
  31. குழமகன்
  32. குறத்திப்பாட்டு
  33. கேசாதிபாதம்
  34. கைக்கிளை
  35. கையறுநிலை
  36. சதகம்
  37. சாதகம்
  38. சிறுகாப்பியம்
  39. சின்னப்பூ
  40. செருக்களவஞ்சி
  41. செவியறிவுறூஉ
  42. தசாங்கத்தயல்
  43. தசாங்கப்பத்து
  44. தண்டகமாலை
  45. தாண்டகம்
  46. தாரகைமாலை
  47. தானைமாலை
  48. எழுகூற்றிருக்கை
  49. தும்பைமாலை
  50. துயிலெடை நிலை
  51. தூது
  52. தொகைநிலைச்செய்யுள்
  53. நயனப்பத்து
  54. நவமணிமாலை
  55. நாமமாலை
  56. நாழிகைவெண்பா
  57. நான்மணிமாலை
  58. நானாற்பது
  59. நூற்றந்தாதி
  60. நொச்சிமாலை
  61. பதிகம்
  62. பதிற்றந்தாதி
  63. பரணி
  64. பல்சந்தமாலை
  65. பன்மணிமாலை
  66. பாதாதிகேசம்
  67. பிள்ளைக்கவி
  68. புகழ்ச்சி மாலை
  69. புறநிலை
  70. புறநிலைவாழ்த்து
  71. பெயர் நேரிசை
  72. பெயரின்னிசை
  73. பெருங்காப்பியம்
  74. பெருமகிழ்ச்சிமாலை
  75. பெருமங்கலம்
  76. போர்க்கெழுவஞ்சி
  77. மங்கலவள்ளை
  78. மணிமாலை
  79. முதுகாஞ்சி
  80. மும்மணிக்கோவை
  81. மும்மணிமாலை
  82. முலைப்பத்து
  83. மெய்க்கீர்த்திமாலை
  84. வசந்தமாலை
  85. வரலாற்று வஞ்சி
  86. வருக்கக் கோவை
  87. வருக்கமாலை
  88. வளமடல்
  89. வாகைமாலை
  90. வாதோரணமஞ்சரி
  91. வாயுறைவாழ்த்து
  92. விருத்தவிலக்கணம்
  93. விளக்குநிலை
  94. வீரவெட்சிமாலை
  95. வெட்சிக்கரந்தைமஞ்சரி
  96. வேனில் மாலை

தமிழ்த்துகள்

Blog Archive