தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, May 31, 2021
Sunday, May 30, 2021
INCOME TAX E FILING 2021 ITR Q&A FULL DETAILS PDF வருமான வரி இ பைலிங் முழு விவரங்கள்
Saturday, May 29, 2021
Friday, May 28, 2021
Thursday, May 27, 2021
மூவகை மாணாக்கர் நன்னூல் பாடலும் விளக்கமும் MOOVAKAI MAANAAKKAR NANNOOL SONG
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரிஅன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
தலை மாணாக்கர்
அன்னப்பறவையையும் பசுவையும் போன்றவர்கள் தலை மாணாக்கர்.
பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரைப்பிரித்து பாலைமட்டும் பருகும் இயல்புடையது அன்னம். அதுபோல ஆசிரியர் கூறுபவற்றுள் நல்லதை எடுத்துக்கொண்டு அல்லதைத் தள்ளி விடும் மாணவர்கள் தலை மாணவர்கள் எனப்படுவர்.
மேலும், தனக்கு உணவு கிடைக்கும்போது வயிறார மேய்ந்துவிட்டு பின்னர் ஓரிடத்தில் படுத்துச் சிறிதுசிறிதாக அசைபோடுவது பசுவின் இயல்பு ஆகும். அதுபோலப் பாடம் சொல்லப்படும்போது கிடைக்கும் எல்லாச் செய்திகளையும் செவியில் வாங்கிக் கொண்டு, பின்னர் அவற்றைச் சிறிது சிறிதாகச் சிந்தனைக்குக் கொண்டு வந்து நினைத்துப் பார்ப்பது தலைமாணவர்களின் இயல்பாகும்.
இடை மாணாக்கர்
நிலத்தையும் கிளியையும் போன்றவர்கள் இடை மாணாக்கர்.
உழவர் மேற்கொள்ளும் முயற்சியின் அளவுக்கு ஏற்பப் பலன் கொடுப்பது நிலத்தின் இயல்பாகும். அதுபோலத் தன்முயற்சி ஏதுமின்றி ஆசிரியர் கூறுவதை மட்டும் கேட்டுப் பயிலும் மாணாக்கர் இடை மாணாக்கர் எனப்படுவர்.
தன்னை வளர்ப்பவர் சொல்லித்தரும் சொற்களை மட்டும் சொல்லும் இயல்புடையது கிளி. அதைப்போன்று தானாக முயன்று புதியனவற்றைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது இடைமாணவர்களின் இயல்பாகும்.
கடை மாணாக்கர்
பொத்தற்குடம், ஆடு, எருமை, பனைமட்டை போன்றவர்கள் கடை மாணாக்கர்.
பொத்தல் குடத்தில் (ஓட்டைக் குடம்) நீர் நிரப்பினால் அது ஓட்டை வழியே நீரை ஒழுகவிட்டு வெறுங்குடமாகிவிடும். அதுபோல ஆசிரியர் கற்பித்தவற்றைக் கேட்டவுடன் மறந்துவிடும் வகை மாணவர்கள் கடை மாணாக்கர் என்ப்படுவர்.
கிடைக்கும் உணவை ஓரிடத்தில் மேயாமல் பார்க்கும் இடங்களிலெல்லாம் நுனிப்புல் மேய்ந்து வயிறு நிரம்பாமல் அலையும் இயல்புடையது ஆடு. அவ்வாடு போலக் கடைமாணாக்கர் எனப்படுவோர் ஓர் ஆசிரியரிடம் ஒழுங்காகக் கற்காமல் பலரிடம் சென்று நுனிப்புல் போல மேலோட்டமாகப் பாடம் கற்று நிரம்பாத அறிவோடு அலையும் இயல்புடையவராயும் இருப்பர்.
குளத்து நீரைக் கலக்கிச் சேறும் சகதியுமாக்கிய பின்னர் அதைப் பருகும் இயல்புடையது எருமை. அதுபோல கடை மாணாக்கர் ஆசிரியரின் மனத்தை வருத்தி நோகடித்து கல்வி கற்பவர்களாகவும் இருப்பர்.
பனை மட்டையைத் தாங்கியிருக்கும் பன்னாடையில் கள்ளை வடிகட்டும்போது அது தேவையான மதுவை விடுத்து தேவையற்றதைப் பிடித்துக் கொள்வது போலக் கடை மாணாக்கர் தேவையானவற்றை விட்டுவிட்டுத் தேவையற்றதைப் பிடித்துக் கொள்ளூம் இயல்புடையவர்களாய் இருப்பர்.
ஆசிரியரை வழிபடும் முறை நன்னூல் பாடலும் விளக்கமும் ASIRIYARAI VALIPADUM MURAI NANNOOL SONG
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடுஎத்திறத் தாசான் உவக்கும் அத்திறம்
அறத்தில் திரியாப் படர்ச்சி வழிபாடே.
மாணவர்கள் ஆசிரியரை வழிபடும் முறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நன்னூல் கூறுகிறது.
குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும் இருக்கவேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வதுபோல மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் மகிழ்வித்து, அறநெறி மாறா நடத்தை உடையவனாய் ஆசிரியரை ஒரு மாணவன் வழிபாடு செய்தல் வேண்டும்
நூல் என்பதன் பெயர்க்காரணம் நன்னூல் பாடலும் விளக்கமும் NOOL PEYAR KARANAM NANNOOL SONG
பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாதகையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியு மாறு.
நூல் நூற்கும் பெண் பஞ்சால் தன் கைகளைக்கொண்டு கதிரால் நூல் நூற்கிறாள். அதுபோலப் புலவன் சொற்களால் தன் வாயைக்கொண்டு அறிவால் நூல் நூற்க குற்றமற்ற நூல் உருவாகிறது.
சொற்கள் பஞ்சாகவும், புலவன் நூல் நூற்கும் பெண்ணாகவும், புலவனின் வாய் அப்பெண்ணின் கையாகவும் , புலவனின் அறிவு நூல் நூற்கும் கருவியான இங்குக் கதிராகவும் கருதப்படுகிறது.
பஞ்சு நூலாக மாறுவது போல சொற்கள் நூலாக நூற்கப்படுவதால் நூல் என்னும் பெயர் அமைந்தது என்று நன்னூல் விளக்குகிறது.
மாணவர்கள் பாடங்கேட்கும் முறை நன்னூல் பாடலும் விளக்கமும் MANAVARKAL PAADAM KETKUM MURAI NANNOOL SONG
கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து
மாணவர்கள் பாடங்கேட்கும் முறை என்ன என்பதை நன்னூல் பின்வருமாறு விளக்குகிறது.
- ஆசிரியர் குறித்துச் சொன்ன நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வழிபடவேண்டும்.
- வெறுப்பில்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.
- ஆசிரியரின் குறிப்புணர்ந்து மாணவன் செயல்படவேண்டும்.
- இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும்.
- படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும்.
- தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.
- சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.
- ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும்.
- முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும்.
- பலமுறை கேட்டுத் தெளிந்தவற்றை மனத்தில் இருத்த வேண்டும்.
- போகலாம் என ஆசிரியர் சொல்லியபிறகே வகுப்பு முடிந்து மாணவன் போகவேண்டும்.
வேலையில்லாத் திண்டாட்டம் தமிழ்க்கட்டுரை VELAIYILLA THINDATTAM TAMIL KATTURAI
வேலையில்லாத் திண்டாட்டம்
முன்னுரை
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் – இச்
சகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி.
முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புறவொன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் – எனிற்
சிந்தனை ஒன்றுடையாள் என்று அவர் பாடிய காலத்தில் இருந்த
மக்கள்தொகை இன்று 137 கோடிக்கும் மேல் சென்றுகொண்டிருக்கிறது. உணவும் உற்பத்தியும்
மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம். தனிநபர் வருமானம் மூலம்தான் ஒருநாட்டின் பொருளாதார உயர்வு
நிர்ணயிக்கப்படுகிறது. எல்லாம் எந்திரமயமாகிவிட்ட இக்காலத்தில் வேலையில்லாத்
திண்டாட்டமும் அதன் தீர்வுகளும் குறித்து இங்கு காண்போம்.
தொழிற்கல்வி தராத கல்வித்திட்டம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பர் நம் முன்னோர். ஆங்கிலேயருக்கு
அடிமைப்பணி செய்வதற்காக மெக்காலே
பிரபு கொண்டுவந்த
கல்விமுறையின் நீட்சியாகவே இன்றைக்கும் இந்தியப் பள்ளிகளும் கல்லூரிகளும் தம்
பாடத்திட்டங்களை வைத்துள்ளன.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை
நன்றே என்றார் அதிவீரராம பாண்டியன். ஆனால் படித்தவர்களோ இன்று வீதிகளில் வேலை
கேட்டு அலைகிறார்கள். நம் கல்விமுறை சுயசார்பை சொல்லித்
தரவில்லை. அரசையோ தனியாரையோ சார்ந்திருக்கும் கல்விமுறையால் வேலை கிடைப்பது
குதிரைக் கொம்பாகிவிட்டது.
புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு என்கிறார் திருவள்ளுவர். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை
ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று கேட்டுக்கொண்டே நம் நாட்டில் இயற்கை வளங்களை அழித்து
வருகிறோம். உலகம் முழுவதும் 17 கோடியே 20 இலட்சம் பேர் வேலையின்றி இருப்பதாக சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு 2018இல் தெரிவித்தது. ஏறத்தாழ 138 கோடி பேர்
கொண்ட நம் நாட்டில் 2020 கணக்குப்படி 7.4% பேர் வேலை இல்லாதோர் விகிதம்
அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தட்டெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 9500
காலிப்பணியிடங்களுக்கு 20 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். மும்பையில் 1167
காவலர் பணிக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலை இந்தியப் பொருளாதார
வளர்ச்சிக்குப் பெருந்தடையாம்.
சந்தனக்கட்டை சுமக்கும் கழுதைகள்
உட்பொருளை அறியாமல் பகவானை அடையும் சாஸ்திரப்
பயிற்சியைவிட சாத்திரங்கள் மூலம் கிடைக்கும் கல்வியே சிறந்தது என்கிறது
பகவத் கீதை. வெள்ளுடுப்பு
வேலை (white collar job) வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால் தன்
கல்விக்குச் சற்றும் பொருந்தாத பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பல இலட்சம் இளைஞர்களை
இன்று நாம் பார்க்கமுடிகிறது. சந்தனக்கட்டை சுமக்கும் கழுதைக்கு அதன் மதிப்பும் தெரியாது.
இதுபோலத்தான் பலர் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திவருகின்றனர்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று என்கிறது உலகப்பொதுமறை. அதாவது தான்செய்யும் ஒரு வேலையை வைத்தே
மற்றொரு வேலையையும் முடிப்பது யானையை வைத்து யானையைப் பிடிப்பதற்குச் சமம்
என்கிறார். உடல் உழைப்பு கேவலம் என்ற நிலை மாற வேண்டும்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும் என்பதை உணர்ந்து முயற்சியுடன் உழைக்கவேண்டும்.
முடிவுரை
ஊதி அணைத்துவிட நீங்கள் ஒன்றும் அகல்விளக்குகள்
அல்ல இளைஞர்களே
சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்
புயலுக்குத் தலைவணங்க நீங்கள் ஒன்றும் புல் அல்ல
எதற்கும் அஞ்சாத இமயமலை வாருங்கள் இளைஞர்களே இனி வானமும் வசப்படும்.
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு தமிழ்க்கட்டுரை VELU NACHIYAR TAMIL KATTURAI
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு
முன்னுரை
விடுதலைப்போரில்
ஆண்களுக்கு நிகராக வாளெடுத்துப் போரிட்ட வீரமங்கை.
இராமநாதபுர மன்னர் செல்லமுத்துசேதுபதியின் ஒரே
வாரிசு. தன் கணவராம் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரைக் கொன்ற
ஆங்கிலேயரைப் பழிதீர்த்து, சிவகங்கையை மீட்டெடுத்த வேங்கை வேலுநாச்சியார்.
ஐதர் அலியின் உதவி
காளையார்கோவில் போரில் தன்
கணவரை நயவஞ்சகமாகக் கொன்ற ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்க திண்டுக்கல் கோட்டையில்
தங்கியிருந்தார். அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது உடனிருந்தனர். அப்போது ஐதர் அலி
மைசூரிலிருந்து அனுப்பிய 5000 குதிரைப்படை வீரர்கள் வந்துசேர்ந்தனர். உருது மொழியில்
ஐதர் அலியிடம் நாச்சியார் பேசியதில் மகிழ்ந்து படை அனுப்பி உதவியுள்ளார்.
குயிலியும் உடையாளும் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்கள், பெண்கள்
படைப்பிரிவுக்குக் குயிலி தலைமை ஏற்றனர். விஜயதசமித் திருநாளன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறந்தன. பெண்கள்
படை பழங்கள், பூக்கூடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்தபடி முதலில் நுழைந்தது. வேலுநாச்சியாரைக் காட்டிக்
கொடுக்க மறுத்ததால் உடையாள் என்பவர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார், அவரது நடுகல் முன்பு வணக்கம் செலுத்தினார்
நாச்சியார். மாறுவேடத்தில் கோட்டைக்குள் சென்ற குயிலி தன் உடலில் தீ வைத்துக்கொண்டு
ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்தார். அச்சமயத்தில் வேலுநாச்சியார் படையுடன்
கோட்டைக்குள் நுழைந்து ஆங்கிலேயரை வென்று பழிதீர்த்தார்.
முடிவுரை
பெண் என்ற போதிலும் சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில் பயிற்சி கற்றுத்தேர்ந்தவர் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி இவற்றுடன் குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்டெடுக்கப்பட்டது.
வீட்டிற்கோர் புத்தகசாலை தமிழ்க்கட்டுரை VEETTIRKOR PUTHAKA SAALAI TAMIL KATTURAI
வீட்டிற்கோர் புத்தகசாலை
முன்னுரை
நான் இன்னும்
வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித்தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த
நண்பன் என்கிறார்
ஆபிரகாம் லிங்கன். மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது
சிரிப்பு மட்டுமன்று, சிந்திப்பதும் தான். சிந்தனையைத் தூண்டுவது கற்றல்
மட்டுமன்று நூல்களும்தான். தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை
பல படைப்புகளைத் தந்தவர். தமிழக முதல்வராய்ப் பொறுப்பேற்று இருமொழிச்சட்டத்தை
உருவாக்கியதோடு சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று
மாற்றிய பெருமைக்குரியவர். அண்ணாவின் வானொலி உரையில் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்துக் காண்போம்.
நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகள்
ஆற்றோரத்தில் ஆலமரத்தடியில் ஏடும்
எழுத்தாணியும் கொண்டு படித்த காலம் அந்தக்காலம். இப்போதோ உலகையே நமது வீட்டுக்கு
அழைத்துவந்து காட்டக்கூடிய காலம். இளைஞர்கள் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை
என்று உணர்ந்துவிட்ட காலம். கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு என்று சொல்லும் காலம். உணவு, உடை என்ற
அடிப்படைத் தேவை பூர்த்தியானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்.
வீட்டில் சிறுகடை அளவுக்குப் பாத்திரங்கள் இருக்கும். சிறு வைத்தியசாலை அளவுக்கு
மருந்து வகைகள் இருக்கும். எனினும் மனவளத்தை அதிகரிக்கும் புத்தகங்கள் இராது. வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம் நாட்டுக்கோர் நல்லநிலை
ஏற்படச் செய்யவேண்டும்.
இடம்பெற வேண்டிய நூல்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நாட்டை அறிய, உலகை அறிய ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம்
அறிவிக்கும் ஏடுகள் இல்லாவிட்டாலும் அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள்
வேண்டும். நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும். சங்க இலக்கியச்சாரம் அறியும் ஏடுகள் வேண்டும். பூகோள சரித ஏடுகள் வேண்டும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் நூல்கள்
வேண்டும். மக்களின் மனமாசு துடைத்தவர்கள், விடுதலைக்கு உழைத்தவர்கள், வீரர்கள்,
விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக்
குறிப்பு ஏடுகள் இருக்க
வேண்டும். நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புதுமுறுக்கு ஏற்படும்.
புகழுக்குரிய நூலகங்கள்
அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள ஓலைச்
சுவடிகளும் பாதுகாக்கப்படும் தஞ்சை சரசுவதி மகால் நூலகமே ஆசியாவின் மிகப்பழமையான நூலகம் ஆகும். சென்னை கன்னிமாரா நூலகத்தில்தான் உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ளன. திருவனந்தபுரம் நடுவண் நூலகம் இந்தியாவின்
முதல் நூலகம் என்ற பெருமைக்குரியது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். அமெரிக்காவின் லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகம் ஆகும்.
முடிவுரை
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்டு 9 ஆம் நாளைத்தான் தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். ஒரு புத்தகத்தைப் படித்துக்
கொள்கிறேன், எனக்கு நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை நாளைக்கு வைத்துக்கொள்ள முடியுமா ? என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா. இவர் நினைவாகவே 2010 இல் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டது. மின்நூல்கள், இணையத்தள வாசிப்பு என வளர்ந்துவிட்ட இந்நாளில் நல்ல நூலைப்போல உதவும்
நண்பர்கள் இல்லை. இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே.
ஆதலின் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைப்போம், வாசிப்பை சுவாசிப்போம்.
விண்ணையும் சாடுவோம் தமிழ்க்கட்டுரை VINNAIYUM SADUVOM TAMIL KATTURAI
.விண்ணையும் சாடுவோம்
முன்னுரை
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு உலகில்
எங்கோ ஓர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அறிவியல் கூறுகிறது. நம் இந்திய
விண்வெளித்துறையின் மூலம் அனுப்பிய செயற்கைக் கோள்களால் இன்று நாம் எண்ணிய
நேரத்தில் திசையன்விளையிலிருந்து தில்லி வரை தொடர்புகொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பயணத்தில்
பாதி இணையம் என்றாகிவிட்ட அறிவியல் யுகத்தில் தமிழர்களின்
பங்கு மகத்தானது. அப்துல்கலாம்,
மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி போன்றோர் வரிசையில் மற்றுமொரு வைரம் இஸ்ரோவின் ஒன்பதாவது
தலைவராகி இருக்கும் முதல் தமிழர் அறிவியலாளர் சிவன்.
நம்பிக்கையின் முதற்படி
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை மாங்காய் வியாபாரி கைலாசவடிவு என்பார்க்கு மகனாக, தலைக்கு மேலே பறக்கும்
விமானத்தில் என்றாவது ஒருநாள் பறக்க வேண்டும் என்ற கனவுடன் கணினி அறிவியல்
படித்தார் சிவன். எம்.ஐ.டியில் படித்த வானூர்திப் பொறியியலே இவரை விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் பொறியாளர் ஆக்கியது.
செயற்கைக் கோளும் சித்தாராவும்
1983 இல் பி.எஸ்.எல்.வி திட்டம் தொடங்கியபோது ஏவூர்தி பயணிக்கும் பாதை, தொலைவு, வடிவம் எவ்வாறு இருக்க
வேண்டும் என வடிவமைக்கும் பணி சிவனுடையதானது. செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு
விவரங்களை மின்னிலக்க முறையில் சேகரிக்கும் சித்தாரா செயலியை உருவாக்கினார் அவர். இதன் மூலம் வாகனத்தின்
செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
இஸ்ரோவின் செயற்கரிய செயல்கள்
செயற்கைக் கோள்களை மக்களுக்காக எப்படிப்
பயன்படுத்தலாம் எனச் சிந்தித்தவர்தான் விக்ரம் சாராபாய் அவர்கள். நிலத்தில் நீரின் அளவு, விளைச்சல் திறன் அறியலாம்.
திறன்பேசிகள், தானியக்கப் பண இயந்திரம், அட்டை
பயன்படுத்தும் இயந்திரம் இவற்றைக் குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான சேவையாக்க
இதுவரை செலுத்தப்பட்டுள்ள 45 செயற்கைக்
கோள்கள் துணை நிற்கின்றன. நேவிக் என்ற
செயலி மீனவர்களுக்கு மீன்
அதிகமுள்ள பகுதிகளை அறிவிக்க உதவுகிறது. சந்திராயன் I & II திட்டங்களில் ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதல் ரோவர் எனப்படும் ஆராயும் ஊர்தி ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியால் பயணிக்கும்.
முடிவுரை
முதல் செயற்கைக் கோளான ஆர்யப்பட்டா ஏவுதலுக்குக் காரணமானவர் இந்திய விண்வெளித்
திட்டத்தின் தந்தை விக்ரம்
சாராபாய்.
இராமேசுவரத்தீவில் பிறந்து இந்திய ஏவுகணை நாயகன் ஆக உயர்ந்தார் பள்ளிக்கல்வியைத்
தமிழ் வழியில் கற்ற அப்துல்கலாம். அரியலூரில் பிறந்து இரண்டாம் பெண்
அறிவியலறிஞர் நிலைக்கு உயர்ந்துள்ள வளர்மதி அவர்கள்
இஸ்ரோவின் செயற்கைக் கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
நெல்லையில் பிறந்த அருணன் சுப்பையா 2013 இல் மங்கள்யான் உருவாக்கிய இந்தியாவின்
செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.
பொள்ளாச்சியின் இளையகலாம் மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் I & II திட்டத்தின் இயக்குநராகப் பணி
ஆற்றியதோடு தம் அறிவியல் அனுபவங்களைக் கையருகே நிலா எனும் நூலாக எழுதியுள்ளார்.
மாங்காய் வியாபாரியின் மகன் இஸ்ரோவின் தலைவர் சிவன் ஆக உயர, பணியாக இருப்பினும் படிப்பாக
இருப்பினும் காட்டிய முழு ஈடுபாடே காரணம் என்கிறார் தம் நேர் காணலில். நாமும் கனவு காண்போம்! விண்ணுயர பல சாதனைகள்
புரிவோம்!
விண்ணைத்தொட்ட மனிதர்கள் தமிழ்க்கட்டுரை VINNAI THOTTA MANITHARKAL TAMIL KATTURAI
விண்ணைத்தொட்ட மனிதர்கள்
முன்னுரை
வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்
சந்திர
மண்டலத்தியல் கண்டு தெளிவோம் – என்றார் முண்டாசுக்கவி பாரதி. பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் அல்லவா? கல்தோன்றி மண் தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிக்கு விண்ணைத்தொடுவது வியப்பா என்ன? கலிலியோ தொலைநோக்கியைக் கண்டுபிடிக்கும் முன்பே
வானில் உள்ள விண்மீன்களைக் கண்டுபிடித்துப் பெயரிட்டு கோவில் மேற்கூரைகளில்
வடித்திருப்பவன் அவன். அவற்றின் கதிர்வீச்சைக் கணக்கிட்டு மனிதனின்
தலையெழுத்தென்று சோதிடவியல் படைத்தவன். நாளும் கிழமையும் வகுத்து அதன்
கூறுகளை ஆய்ந்தவர்கள் நம் முன்னோர். தமிழரின் விண்ணியலறிவை இக்கட்டுரையில்
காண்போம்.
விண்வெளியில் தமிழரின் அறிவு
அண்டப்பகுதியின்
உண்டைப் பிறக்கம்
அளப்பரும்
தன்மை வளப்பெரும் காட்சி என்று
மட்டும் மாணிக்கவாசகர் பாடிவிட்டுச் சென்றிருந்தால் வெறுங்கற்பனை, கவிதை
என்றிருப்போம்.
நூற்றொரு
கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக்
கதிரின் துன் அணுப்புரைய என்று
கூறிவிட்டாரே. அதாவது மேற்கூரையினின்று வெளிவரும் சூரியக் கதிரொளியில் சுழலும்
தூசு போன்றது இந்தப் பேரண்டம். இதைவிட வேறென்ன விளக்கம் வேண்டும் ?
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன்
விராய கோள் மீன் போல என்ற உவமையைப்
பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளாரே? தாலமி சொன்ன பிறகுதான் சூரியனைக் கோள்கள்
வலம் வருகின்றன என்று உலகத்திற்குத் தெரிந்தது.
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண்
மாலை மறைந்தாங்கு என்று புறநானூற்றுப்புலவன் நிலவும் கதிரும்
சந்திக்கும் வேளையில் ஒன்றுக்கு வழிவிட்டு ஒன்று மறைந்ததை ஒப்புமையாகச்
சொல்கிறான். சாத்தனாரோ இன்றைய நவீன விண்வெளியைப் பார்த்தவர் போல புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா
வானூர்தி என்று ஆளில்லா விமானத்தைப் பற்றி அன்றே
எழுதியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர்தம் விண்ணியலறிவு பரந்து
விரிந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிறதன்றோ?
அப்துல் கலாம்
1931 அக்டோபர் 15 ஆம் நாள் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் – ஆஷியம்மா
இணையருக்குப் பிறந்தார் கலாம். அரசுப்பள்ளியில் பயின்ற அவர் திருச்சி, சென்னை
கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்து வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பணியில் முதன்மை அறிவியலாளர் ஆனார். 1970 முதல் 1990
முடிய அக்னி, பிருத்வி, திரிசூல், ஆகாஷ் எனப் பல
ஏவுகணைகளைத் தயாரித்து ஏவுகணை நாயகன் ஆனார். 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட பெரிதும்
காரணமாய் இருந்தார். 1981 இல் பத்மபூசன், 1990 இல் பத்ம விபூசன், 1997 இல் பாரத ரத்னா, 2009 இல் ஹூவர் பதக்கம் பெற்று விருதுகளின் நாயகன் ஆனார். அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, பற்றவைக்கப்பட்ட
மனங்கள்
போன்ற நூல்களை எழுதியுள்ளார். 2002
முதல் 2007 வரை குடியரசுத்தலைவராக இருந்து மக்களின் ஜனாதிபதி என்று போற்றப்பட்டார். 2015 ஜூலை 27 இல் மேகாலயா ஷில்லாங்கில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மயங்கி
விழுந்து மறைந்தார். மக்கள் மனதில் நிறைந்தார்.
கல்பனா சாவ்லா WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இந்தியத் தாயின் வயிற்றிலே பிறந்தவள் கல்பனாசாவ்லா. பஞ்சாப் மாநிலம் கர்னாலில் பனாரஸ்லால் சாவ்லா – சன்யோகிதா தேவியின் பிள்ளை அவள். தாகூர் அரசுப்பள்ளியில் அவள் தொடங்கிய கல்வி
பொறியியல் கல்லூரி, பல்கலைக் கழகம் வரை பரந்து விரிந்தது. நாசா அமெஸ் ஆய்வுக்கூடத்தின் துணைத்தலைவராக இருந்த கல்பனா 1996 இல் எஸ்.டி.எஸ்-87 என்ற
விண்கலத்தில் விண்வெளி ஆய்வுக்குச் சென்ற அறுவருள் ஒருவரானார். பூமியை 252 முறை சுற்றி வந்த அவர் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்தார். 2003 இல் எஸ்.டி.எஸ் 107 விண்கலத்தில் எழுவருள் ஒருவராய் 16 நாள்கள் விண்வெளி ஆய்வு மேற்கொண்டார். திரும்பி வந்த விண்கலம் டெக்சஸ் பகுதியில் வெடித்துச் சிதறியது. அவர்தம் இறப்பால் நாடே
கதறியது.
விண்வெளி அறிவில் வருங்காலத்தில்...
நிலவைக்காட்டிச் சோறூட்டிய
காலம் மாறி நிலவுக்கே சென்று சோறூட்டும் காலம் நெருங்கிவிட்டது. சந்திரனுக்குச் சந்திராயனும், செவ்வாய்க்கு மங்கள்யானும் நம்மால் அனுப்பப்பட்டுவிட்டது. இன்று மயில்சாமி அண்ணாதுரையும் இஸ்ரோ தலைவர் சிவனும் நம் கண்முன்னே நிற்கும் முன்மாதிரிகள். நாம் விண்ணில்
செய்ய வேண்டிய சாதனைகள் பல உள்ளன. விண்வெளிக் குப்பைகள் பேராபத்தை விளைவிப்பதால் அவற்றை அகற்ற வேண்டும். விண்வெளி ஆய்வுக்கூடங்கள் ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தைத் தராதவாறு
இருக்க வேண்டும். விண்வெளியில் விளையாட்டு வினையாக மாறிவிடக்கூடாது. மாறாக அங்கே விவசாயம் சாத்தியமா என ஆராய வேண்டும். புவியைப் படமெடுத்து
படமெடுத்து வந்து அதன் உடல் துளைத்து வளம்
அழிப்பதை விட்டுவிட்டு வேற்றுக் கோள்களில் குடியேற வழி தேட வேண்டும்.
முடிவுரை
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி
வியனுலகாண்டு வீற்றிருப்பாரே என்கிறார் முதல் திருமுறையில் திருஞானசம்பந்தர். ஐந்தாம் தலைமுறை நாம் அறிவின் குழந்தையாம், அறிவியல் வளர்த்து அவ்விடம் செல்வோம். நம் முன்னோர்தம் விண்ணியலறிவை இம்மண்ணுள்ளார்க்குத் தெளிவுற விளக்குவோம். எலிக்குத் தலையல்ல நாம், புலிக்கு வால் என்பதைப் புரியவைப்போம். எட்டிவிடும் தூரம்தான் இன்னும் முயற்சிப்போம், முயற்சித்தால் அவ்வானமே வசப்படும்.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பருவம் 3 3.அலகு...
-
வீட்டிற்கோர் புத்தகசாலை முன்னுரை நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித்தந்து என்...
-
பதிவிறக்கு/DOWNLOAD Drive இல் xl open ஆகும் வலது மேல்புறம் உள்ள 3 புள்ளிகளைத் தொட்டு share என்பதைத் தொட்டு பதிவிறக்கம் செய்யவும் பின் off...
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
May
(244)
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 16 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 15 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 14 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 13 புதிரும் விடையு...
- INCOME TAX E FILING 2021 ITR Q&A FULL DETAILS PDF ...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 12 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 11 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 10 புதிரும் விடையு...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 9 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 8 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 7 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 6 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 5 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 4 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 3 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 2 புதிரும் விடையும...
- தமிழ் விடுகதைகள் தொகுப்பு பகுதி 1 புதிரும் விடையும...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்குநாட்டு வணிகம் க...
- மூவகை மாணாக்கர் நன்னூல் பாடலும் விளக்கமும் MOOVAKA...
- ஆசிரியரை வழிபடும் முறை நன்னூல் பாடலும் விளக்கமும் ...
- நூல் என்பதன் பெயர்க்காரணம் நன்னூல் பாடலும் விளக்கம...
- மாணவர்கள் பாடங்கேட்கும் முறை நன்னூல் பாடலும் விளக்...
- சுட்டிக் குழந்தைகளுக்கான அடிப்படைத் தமிழ், பொதுஅறி...
- சுட்டிக் குழந்தைகளுக்கான உயிர்மெய் எழுத்துகள் வரிச...
- வல்லினம் மிகுமிடங்கள், மிகாவிடங்கள் தமிழ் இலக்கணம்...
- புணர்ச்சி விதிகள் தமிழ் இலக்கணம் TAMIL ILAKKANAM P...
- தமிழ் இலக்கணக்குறிப்புகள் 501 TAMIL 501 ILAKKANA K...
- வேலையில்லாத் திண்டாட்டம் தமிழ்க்கட்டுரை VELAIYILLA...
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு தமிழ்க்கட்...
- வீட்டிற்கோர் புத்தகசாலை தமிழ்க்கட்டுரை VEETTIRKOR ...
- விண்ணையும் சாடுவோம் தமிழ்க்கட்டுரை VINNAIYUM SADUV...
- விண்ணைத்தொட்ட மனிதர்கள் தமிழ்க்கட்டுரை VINNAI THOT...
- விசும்பின் துளியும் பசும்புல் தலையும் தமிழ்க் கட்ட...
- போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்து மடல் W...
- வளரும் செல்வம் தமிழ்க்கட்டுரை VALARUM SELVAM TAMIL...
- மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் மேடை உரை MANAVA P...
- முடிவில் ஒரு தொடக்கம் - பெயர்க்காரணம் - ஹிதேந்திரன...
- மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் LETTER TO ELECTRICI...
- மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் DEO INVIT...
- மாணவரும் சமுதாயத்தொண்டும் தமிழ்க்கட்டுரை MANAVARUM...
- மருவூர்ப்பாக்க வணிக வீதிகளும் இன்றைய அங்காடிகளும்...
- நூல் மதிப்புரை - கருவாச்சி காவியம் வைரமுத்து VAIRA...
- மகனுக்கு எழுதிய கடிதம் -நா.முத்துக்குமார் NA.MUTH...
- மகளிர் நாள் விழா அறிக்கை WOMAN'S DAY REPORT
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 மழைச்சோறு குறுவினா வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக குறுவினா...
- எட்டாம் வகுப்பு தமிழ் திருக்குறள் இயல் 5 குறுவினா ...
- பொருள்கோள் வகைகள் தமிழ் இலக்கணம் PORULKOL VAKAIKAL...
- நான் விரும்பும் தலைவர் தந்தை பெரியார் தமிழ்க் கட்ட...
- புத்தகம் கேட்டு உறவினருக்குக் கடிதம் LETTER TO REL...
- தரமற்ற உணவு குறித்துப் புகார்க் கடிதம் COMPLAIN LE...
- பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு மடல் BIRTHDAY INVITI...
- விளையாட்டுப் போட்டியில் வென்ற நண்பனுக்குப் பாராட்ட...
- மாதிரி பா நயம் பாராட்டல் PAA NAYAM PAARAATTAL MODEL
- பாதம் தமிழ்க்கட்டுரை துணைப்பாடம் PAATHAM THUNAIPAA...
- பயணம் தமிழ்க்கட்டுரை துணைப்பாடம் PAYANAM THUNAIPAA...
- பயணங்கள் பல வகை தமிழ்க்கட்டுரை PAYANANGAL PALA VAK...
- நூல்கள் வேண்டி பதிப்பகத்தாருக்குக் கடிதம் LETTER T...
- பணப்பை - பாராட்டு - கடிதம் எழுதுதல் பத்தாம் வகுப்ப...
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தமிழ்க்கட்டுரை NOYA...
- நூலகம் தமிழ்க் கட்டுரை LIBRARY ESSAY IN TAMIL NOOL...
- நூலகம் வேண்டி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் LETTER ...
- நான் விரும்பும் நூல் - திருக்குறள் NAAN VIRUMPUM N...
- நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் LETTER TO PUBLISHER
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு தமிழ்க்கட்...
- மரம் நடு விழா பசுமைப்படை சார்பாக நன்றியுரை MARAM ...
- பிறந்தநாள் பரிசுக்கு நன்றி மடல் THANKS LETTER TO U...
- சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம் TOUR LETTER ...
- தொற்றுநோயைத் தடுக்க வேண்டி விண்ணப்பம் THOTRU NOYAI...
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா உரை NSS...
- தேசிய ஒருமைப்பாடு தமிழ்க் கட்டுரை THESIYA ORUMAIPP...
- திறன்பேசி நன்மை, தீமை குறித்துத் தங்கைக்குக் கடிதம...
- திருவிழாவைக் காண வருமாறு உறவினருக்கு அழைப்புக் கடி...
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் தமிழ்க் கட்டுரை T...
- தாய்மொழிப்பற்று தமிழ்க் கட்டுரை THAIMOZHI PATRU TA...
- தாய்மைக்கு வறட்சி இல்லை தமிழ்க்கட்டுரை வகுப்பு 9 த...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 நாட்டுப்புறக் கைவினைக...
- 12 ஆம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் HS...
- 12 ஆம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் +2...
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும் VALLINAM...
- புணர்ச்சி விதிகள்- தமிழ் இலக்கணம் PUNARCHI VITHIKA...
- எட்டாம் வகுப்பு இயல் 5 பாடறிந்து ஒழுகுதல் குறுவினா...
- மயங்கொலிச் சொற்கள் ர, ற பொருள் வேறுபாடு 302 சொற்கள...
- மயங்கொலிச் சொற்கள் ல, ள, ழ பொருள் வேறுபாடு 301 சொற...
- மயங்கொலிச் சொற்கள் ண, ன பொருள் வேறுபாடு 200 சொற்கள...
- போலி தமிழ் இலக்கணம் BOLI TAMIL ILAKKANAM
- நூலில் இருக்கக்கூடாத பத்துக் குற்றங்கள் நன்னூல் பா...
- நூலில் இருக்கவேண்டிய பத்துவகை அழகுகள் நன்னூல் பாடல...
- நல்லாசிரியர் இலக்கணம் நன்னூல் பாடலும் விளக்கமும் -...
- வல்லினம் மிகும் இடங்கள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் VAL...
- தமிழ் இணைச்சொற்கள் TAMIL INAI CHORKAL நேர்இணை, எதி...
- 73 தமிழ் இணை மொழிகள் INAI MOZHIGAL TAMIL
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் தமிழ்க்கட்டுரை KAIT...
- நான் விரும்பும் கவிஞர் – பாரதியார் தமிழ்க்கட்டுரை ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள் 10TH TAMIL ANI ILAKKANAM
- தமிழர் உணவும் விருந்தோம்பலும் தமிழ்க் கட்டுரை TAMI...
- தண்ணீர் 9ஆம் வகுப்பு துணைப்பாடக் கட்டுரை THANNEER ...
- செய்தி 9ஆம் வகுப்பு துணைப்பாடக் கட்டுரை SEYTHI 9TH...
- சும்மா கிடைக்கவில்லை சுதந்தரம் தமிழ்ப்பேச்சு SUMMA...
- சிறுசேமிப்பும் நாட்டின் வளர்ச்சியும் தமிழ்க்கட்டுர...
-
▼
May
(244)