வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
- வல்லெழுத்து மிகுமிடங்கள்
- அ,இ,உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் மிகும்.
- அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் மிகும்.
- அப்படி,இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் மிகும்.
- அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் மிகும்.
- இனி, தனி என்னும் சொற்களின் பின் மிகும்.
- வேற்றுமைப் புணர்ச்சியில்
- இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்.
- நான்காம் வேற்றுமை விரியில் மிகும்.
- ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப்பெயர்களின் பின் மிகும்.
- ஏழாம் வேற்றுமைத் தொகையில் மிகும்.
- அல்வழிப் புணர்ச்சியில்
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் மிகும்.
- பண்புத்தொகையில் மிகும்.
- இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் மிகும்.
- அரை,பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் மிகும்.
- உவமைத்தொகையில் மிகும்.
- ஆய், போய் என்னும் வினையெச்சச் சொற்களின்பின் மிகும்.
- இகர, அகர ஈற்று வினையெச்சங்களின் பின் மிகும்.