கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

தமிழ் இணைச்சொற்கள் TAMIL INAI CHORKAL நேர்இணை, எதிர்இணை, பண்பு செறிஇணை, செயல் செறிஇணை

 ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது இணைச்சொல் எனப்படும்.

"மாப்பிள்ளைக்கு நிலம்புலம் உள்ளதா ?" 

இங்கு நிலம் என்பது நன்செய் வயல் ஆகும். 

புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.

ஒரே பொருள்தரும் இரு சொற்கள் இணைந்து வருவது நேரிணைச் சொற்கள் எனப்படும்.

நேரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.

  • சீரும் சிறப்பும்
  • பேரும் புகழும்
  • ஈடு இணை
  • உற்றார் உறவினர்
  • நோய் நொடி
  • குற்றங் குறை
  • கூன் குருடு
  • வாடி வதங்கி
  • முக்கலும் முனங்கலும்
  • வாயும் வயிறும்
  • மூக்கும் முழியும்
  • ஆற அமர
  • இடுக்கு மிடுக்கு
  • எடக்கு மடக்கு
  • பாயும் படுக்கையும்
  • தங்கு தடை
  • முட்டி மோதி
  • ஒட்டி உலர்ந்து
  • தப்பித் தவறி
  • ஓட்டச் சாட்டம்
  • நாணிக் கோணி

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொற்கள் இணைந்து வருவது எதிரிணைச் சொற்கள் எனப்படும். 
எதிரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.
  • அல்லும் பகலும்
  • உயர்வு தாழ்வு
  • அடியும் நுனியும்
  • உள்ளும் புறமும்
  • குறுக்கும் நெடுக்கும்
  • உச்சிமுதல் உள்ளங்கால் வரை
  • ஐயந்திரிபற
  • இருளும் ஒளியும்
  • கிழக்கும் மேற்கும்
  • வடக்கும் தெற்கும்
  • ஏட்டிக்குப் போட்டி
  • மேடு பள்ளம்

ஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது செறியிணைச் சொற்கள் எனப்படும். 
செறியிணைச் சொற்கள் பின்வரும் இரு வழிகளில் அமையும்.

பண்பு செறியிணைச் சொற்கள்

  • செக்கச் செவேல்
  • வெள்ளை வெளேர்
  • பச்சைப் பசேல்
  • நட்ட நடுவில்

செயல் செறியிணைச் சொற்கள்

  • அழுதழுது
  • நடந்து நடந்து
  • கொஞ்சிக் கொஞ்சி
  • பார்த்துப் பார்த்து

தமிழ்த்துகள்

Blog Archive