பதிப்பகத்தாருக்குக் கடிதம்
அனுப்புநர்
அ.கபிலன்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
அருப்புக்கோட்டை.
பெறுநர்
நெய்தல் பதிப்பகம்,
10, பாரதி தெரு,
மதுரை.
மதிப்பிற்குரிய
ஐயா,
பொருள் – நூல்களைப் பதிவுப் பொட்டலத்தில் அனுப்பி
வைக்கக் கோருதல் சார்பாக...
வணக்கம். தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம்
என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். புத்தகங்களுக்கான தொகையினை அஞ்சலாளிடம் செலுத்திப்
பெற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள, அ.கபிலன்.
நாள் – 03-02-20
இடம் - அருப்புக்கோட்டை
உறை
மேல் முகவரி –
நெய்தல் பதிப்பகம்,
10, பாரதி தெரு,
மதுரை.