கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

பயணம் தமிழ்க்கட்டுரை துணைப்பாடம் PAYANAM THUNAIPAADA KATTURAI JOURNEY ESSAY IN TAMIL

 

பயணம்

முன்னுரை              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. மூன்றாவது சம்பளத்தில் நான் ஒரு மிதிவண்டி வாங்கினேன். 180 ரூபாய். கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு வரைக்கும் செல்வது ஐந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்கும். ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை.

பழுதான மிதிவண்டி                              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அதிகாலையிலேயே கிளம்பினேன். இரண்டு நாட்களில் ஹாசன் சேர்ந்துவிட்டேன். சக்லேஷ்பூர் வரைக்கும் சிறு சிறு தூறல். நிற்காமல் சென்று கொண்டிருந்தேன். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது மிதி வண்டி சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஒட்டுகிற கருவியும் காற்றடிக்கும் கருவியும் கடன் வாங்கி எடுத்துச் சென்ற உறவுக்காரப் பையன் திருப்பித் தரவில்லை. மிதி வண்டியைத் தள்ளிக் கொண்டு நடந்தேன்.

சிறுவனின் உதவி              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஒரு குடிசை தெரிந்தது. அருகில் இருந்து தான் அந்த சிறுவன் குரல் கொடுத்தான். நான் குடிசையை நெருங்கினேன். உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து தந்தான். உள்ளே இருந்து ஒரு நடு வயதுப் பெண்மணி கதவருகே வந்து நின்றார். 200 மையிலுமா மெதிச்சிகிட்டு வர்ரீங்க, அவன் புருவம் உயர்ந்தது. எனக்கு மிதிவண்டி அம்மா வாங்கித் தர மாட்றாங்க. நீ பெரியவனாய்ட்டா அம்மா வாங்கித் தருவாங்க. குரங்கு பெடல் போட்டு தான் ஓட்டுவேன்.

தயாரானது மிதிவண்டி                                  WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மழை நிக்கட்டும், நான் கத்து கொடுக்கிறேன். நான் சுற்றிய ஊர்களைப் பற்றியும் பார்த்த மனிதர்களைப் பற்றியும் கேட்டான். சந்திரேகௌடா சக்கரத்தைச் சரிசெய்து, காற்றடைத்துத் தந்தார். நான் கொடுத்த பணத்தை நன்றியுடன் வாங்கிக்கொண்டார். வரும் போது அவனை மிதிவண்டியில் ஏறி ஓட்டி வரும்படி சொன்னேன். அவனது அம்மா சூடாக அவல் தந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மழை பிடித்துவிட்டது. விடிந்த போது மழை விட்டிருந்தது.

பயணம் தொடர்ந்தது                       WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

விடை பெற்றுக் கொள்ளும் போது மனதில் ஊமைவலி எழுந்தது. சிறுவன் மிகவும் வாதாடி என்னுடன் வருவதற்கு அனுமதி பெற்று விட்டான். அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. எங்க மாமா கொஞ்ச நேரம் அவங்க மிதிவண்டியை தொட்டுட்டா என்ன கத்து கத்து வாங்க தெரியுமா ? அவங்க முன்னால நான் போய் இறங்கினதும் அதிசயப்படுவாங்க. அது வரைக்கும் போய் வரவா என்றான். சரி என்றேன்.

முடிவுரை                                 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

சிறுவன் என்னைப் பார்த்துப் பெருமிதமாய் சிரிப்பது போலவும் இருந்தது. எதிர்பாராதவிதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்து விட்டேன். வண்டியும் உடனே கிளம்பி விட்டது.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive