கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

ஆசிரியரை வழிபடும் முறை நன்னூல் பாடலும் விளக்கமும் ASIRIYARAI VALIPADUM MURAI NANNOOL SONG

 அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி

நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு

எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம்

அறத்தில் திரியாப் படர்ச்சி வழிபாடே.

- நன்னூல் 46

மாணவர்கள் ஆசிரியரை வழிபடும் முறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நன்னூல் கூறுகிறது.

குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும் இருக்கவேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வதுபோல மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் மகிழ்வித்து, அறநெறி மாறா நடத்தை உடையவனாய் ஆசிரியரை ஒரு மாணவன் வழிபாடு செய்தல் வேண்டும்

தமிழ்த்துகள்

Blog Archive