மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்
மேடை
உரை
பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் - இந் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நினைவகற்றாதீர் என்றார் மகாகவி பாரதி. ஜனவரி 26 குடியரசு நாள், ஆகஸ்ட் 15 விடுதலை நாள், மே 1 உழைப்பாளர் நாள், அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் ஆகியவற்றை நாட்டு
விழாக்களாக நாம் கொண்டாடி வருகிறோம். சமய விழாக்களை ஒற்றுமையுடன் கொண்டாடும் ஒரே
நாடு நம் இந்தியா தான் என்றால் அது மிகையாகாது.
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்ததும் வணிகம்
செய்ய வந்தனர் ஐரோப்பியர்.
அதன் பின்னரே ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் வந்தனர்.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாட்டை அடிமைப்படுத்தினர்.
பூலித்தேவன், நானா சாஹிப்,
தாந்தியா தோபே, வீரமங்கை வேலுநாச்சியார்,
ஜான்சி ராணி லட்சுமிபாய் என வெள்ளையரை எதிர்த்து வீர மரணம் அடைந்தனர் பலர்.
காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கிய பின்னர் கோகலே,
திலகர், தாதாபாய் நௌரோஜி,
நேதாஜி, மகாத்மா காந்தி என மக்கள்
தலைவர்கள் அணிவகுத்தனர். 1947 ஆகஸ்ட் 15இல் அடிமை ஆட்சி முடிவுக்கு வந்தது.
மக்களாட்சி நமக்குப்
பல உரிமைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பல கடமைகளை இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ளது.
மாணவரின் மாண்பு அவர்தம் செயல்களில், கல்வியில்,
அர்ப்பணிப்பில் வெளிப்படவேண்டும்.
விளையாட்டு, ராணுவம்,
அறிவியல் ஆய்வு, வேளாண்மை என இளைஞர்களின் பங்கு
வெளிப்படவேண்டும்.
தேசிய மாணவர் படை,
நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம்,
செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம்,
தேசிய பசுமைப்படைத் திட்டம் எனப்
பல தன்னார்வ இயக்கங்கள்
உள்ளன.
மரம் நடுதல், சுகாதார விழிப்புணர்வு போன்ற
செயல்களில் ஈடுபடுத்தி மாணவப் பருவத்தில் மாண்பு உடையவராகப்
பயிற்சி பெறலாம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழென்று சங்கே முழங்கலாம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM