திருவிழாவைக் காண வருமாறு உறவினருக்கு அழைப்புக் கடிதம்
7, கம்பர் தெரு,
அழகாபுரி.
07-01-2022.
அன்பிற்கினிய அத்தைக்கு,
தங்கள் மருமகள் கவிதா எழுதும் மடல். நலம். நாடுவதும் அதுவே. நம் ஊரில் பேச்சியம்மன் கோவில் திருவிழா எதிர்வரும் 17-1-2020 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காணும் பொங்கலன்று நடைபெற இருக்கும் திருவிழாவில் வழக்கம் போல் பல போட்டிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு போல் கோலப்போட்டியில் நீங்கள்தான் முதல் பரிசு பெறுவீர்கள். அறுவடைத் திருவிழாவாக நம் ஊரே கொண்டாடி மகிழும் இவ்விழாவில் நீங்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.
சிறு வயதில் நீங்கள் ஓடியாடிய களத்து மேடுகளும், பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய வயல்வெளிகளும் உங்களுக்காக என்னைப்போலவே காத்துக்கிடக்கின்றன. வாருங்கள்! கொண்டாடுவோம்!
தங்கள் அன்பு மருமகள்,
அ.கவிதா.
உறைமேலிட்ட முகவரி
மா.தேன்மொழி,
25, அன்பு நகர்,
திருச்சி – 4.