.
நூல் மதிப்புரை - கருவாச்சி காவியம்
புத்தக மதிப்புரை என்பது ஒரு புத்தகத்தின் வடிவம், பாணி, தகுதி போன்றவற்றை உள்ளடக்கிய இலக்கிய விமரிசன வகை என்பது நீங்கள்
அறிந்ததே. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
வைரமுத்து அவர்களின் எழுத்துத்
திறமையில் மிளிரும் இன்னொரு புத்தகம் தான் கருவாச்சி
காவியம். புத்தகத்தைப் படிக்கும்போது கிராமத்திலேயே
சுற்றிக்கொண்டிருந்த உணர்வு ஏற்படுகிறது. திருமணமாகி 11 நாள்களிலேயே பழைய பரம்பரைப் பகை காரணமாக கருவாச்சியை, கணவன் கட்டையன் ஒதுக்கி வைத்து விடுகிறான். தனி ஒரு ஆளாக எப்படித் தன் வாழ்க்கையை அவள் தைரியமுடன் எதிர்கொள்கிறாள் என்பதே இப்புத்தகத்தின் கரு. வருணனைகளுக்கு நடுவே கருவாச்சியின் வாழ்க்கைப் போராட்டம். கண்ணாடி வளவிச் சத்தம் தெருவையே தொரட்டியடிக்க, சும்மா ணங்கு
ணங்கு ன்னு எறங்குற
ஒலக்க ஒரலுக்குள்ள புகுந்து கல் வாத்தியம் வாசிக்க... இப்படிப் பல வருணனைகள். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி
காவியமும் இரட்டைக் காப்பியங்கள் என்றே சொல்லலாம். கிராமத்து மக்களின் போராட்ட வாழ்வை மண் வாசனை மாறாமல் இயற்கைக்
காட்சிகளோடு குழைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் புத்தகம் படித்தால் கிராமத்து வாழ்க்கையை
அனுபவித்து வந்த திருப்தி கிடைக்கும் என்பது உறுதி.