கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் LETTER TO ELECTRICITY OFFICER FOR STREET LIGHT

 

.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

கா.பாரதி,

3, காமராசர் நகர்,

மதுரை.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் - பழுதடைந்துள்ள மின்விளக்குகளைச் சரி செய்வது தொடர்பாக...

வணக்கம். நான் மதுரையில் உள்ள காமராசர் நகரில் வசித்து

வருகிறேன். கடந்த சில நாட்களாக எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. வேலை முடிந்து திரும்பி வருபவர்கள் இருளில் வீடு திரும்ப வேண்டியுள்ளது. திருடர்கள் பயமும் அதிகரித்துள்ளது. சாலை மேடு பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. பாம்பு போன்ற பூச்சிகளின் பயமும் உள்ளது. மாணவர்கள், நோயாளிகள், முதியோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். தெருவில் வசிக்கும் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகிறார்கள். எனவே எங்கள் தெருவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

இப்படிக்கு,

 தங்கள் உண்மையுள்ள,

           கா.பாரதி.

இடம் – மதுரை,

நாள் 11-12-2019.

உறைமேல் முகவரி –

பெறுநர் –

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

மதுரை.

 

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive