கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

விளையாட்டுப் போட்டியில் வென்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் LETTER TO FRIEND FOR WINNING SPORTS

 

.

விளையாட்டுப் போட்டியில் வென்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம்

      2-34, பாரதி நகர்,

அழகாபுரி.

     22-11-20.

அன்பிற்கினிய நண்பா,            WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     நான் நலம். அங்கு நீ நலமா ? உன் பெற்றோர் நலமா ? இன்றைய செய்தித்தாளைப் புரட்டியபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆம், மாவட்டச் செய்திகள் பகுதியில் மாவட்ட அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் நீ முதலிடம் பெற்ற செய்தியை அறிந்தேன்.

என் பெற்றோருக்கும் நம் நண்பர்களுக்கும் இச்செய்தியைக் காண்பித்தேன். அனைவரும் உன்னை உள்ளம் மகிழப் பாராட்டினார்கள். அடுத்து நடைபெற உள்ள மண்டல அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் நீ வாகை சூட என் மனமார்ந்த வாழ்த்துகள்.                               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

உன் தந்தையின் பணி காரணமாக நீ இப்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறாய். எனினும் என் உள்ளம் உன்னோடுதான் பயணிக்கிறது. நீ எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும். விளையாட்டில் இன்னும் பல சாதனைகள் பெற என்னுடைய வாழ்த்துகள்.

                                            என்றும் அன்புடன்,

         உன் அன்பு நண்பன்,

         செ.பாலமுருகன்.

உறைமேலிட்ட முகவரி              

    மு.முத்துமுருகன்,

     61, தென்றல் நகர்,

     கல்லூரணி.

 

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive