கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

நூலில் இருக்கக்கூடாத பத்துக் குற்றங்கள் நன்னூல் பாடல், விளக்கம் BOOK 10 KUTRANGAL NANNOOL SONG

 குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

வழூஉச்சொ்ற் புணர்த்தல் மயங்க வைத்தல்

வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்

சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை

என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே. 

நன்னூல் 12

பத்துக் குற்றங்கள் என்பவை, ஒரு நூலில் இருக்கக்கூடாதவை என நன்னூல் வரையறுத்துக் கூறுவதாகும்.

  1. குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல்
  2. குறித்த ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களைவிட மிகைப்படக் கூறுதல்
  3. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுதல்
  4. முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல்
  5. குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல்
  6. கூறவேண்டிய செய்தியை இதுவோ அதுவோ என்று தயக்கத்தோடு கூறுதல்
  7. பொருளோடு பொருந்தாத வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல்
  8. சொல்லத் தொடங்கியப் பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல்
  9. விரிவாகச் சொல்ல ஆரம்பித்து பொருளை போகப்போகச் சொல்நடையும் பொருள் நடையும் தேய்ந்து குறைத்து முடித்தல்
  10. சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல்

ஆகிய இப்பத்தும் ஒருநூலுக்கு இருக்கக்கூடாத குற்றங்களாகும்

தமிழ்த்துகள்

Blog Archive