கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

தொற்றுநோயைத் தடுக்க வேண்டி விண்ணப்பம் THOTRU NOYAI THADUKKA VENDI VINNAPPAM

 

.

தொற்றுநோயைத் தடுக்க வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்

      மு.முத்துமுருகன்,                   

2-34, பாரதி நகர்,

அருப்புக்கோட்டை.

பெறுநர்

      நகராட்சி ஆணையர் அவர்கள்,

      சுகாதாரத்துறை ஆணையர் அலுவலகம்,

      அருப்புக்கோட்டை-626101                    

      விருதுநகர் மாவட்டம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் - பாரதி நகர் பகுதியில் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் சார்பு...                                                  

வணக்கம், நான் அருப்புக்கோட்டை நகராட்சியில் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் 2-30, 2-38 ஆகிய வீடுகளில் குடியிருப்போருக்கு கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.          ஆனால் அவர்கள் வீட்டில் உள்ளோர் முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இது எங்கள் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கம்பர் தெருவிலிருந்து எங்கள் தெருவிற்கு வரும் குறுக்குச் சந்து மூலமாகவும் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது.                    

இவற்றைத் தடுத்தும் சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளித்தும் எங்கள் பகுதியில் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                          நன்றி,

நாள் – 17 – 08 -2022                                               தங்கள் உண்மையுள்ள,

இடம் – அருப்புக்கோட்டை.                                          மு.முத்துமுருகன்.

உறைமேலிட்ட முகவரி              

    நகராட்சி ஆணையர் அவர்கள்,

      சுகாதாரத்துறை ஆணையர் அலுவலகம்,

      அருப்புக்கோட்டை-626101                   

      விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive