மரம் நடு விழா
பசுமைப்படை
சார்பாக நன்றியுரை
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
இச்சகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவி பாரதி கூட காணி நிலம் வேண்டும் என்றார். பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும்
என்று அடம் பிடித்தார். குளிர்ந்த நீர்த்தண் சுனைகள் நிறைந்த நாடு, வற்றாத நதிகள் பாயும் வளம் மிக்க நாடு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலம் பிரித்துப்
பயிர் விளைத்த நாடு. இன்று
நீரையும் நாளை காற்றையும் விலைக்கு விற்கும்
நாடு ஆகிப்போனது.
உயிர்க்கோளம்
போர்த்தியுள்ள பசுமைப்பட்டாடை கரிவளியின் கறைகள் பட்டு கருகிவிட்டது.
நெகிழியின் பயன்பாட்டால் நிலத்தடி நீர்
வற்றி விட்டது என்று விபரீதம் உணர்த்தி விழிப்புணர்வு கொள்ளச் செய்து மரங்கள்
இயற்கை தந்த வரங்கள் என நம் மனதில் பதிய வைத்த சிறப்பு விருந்தினர் ஐயா தமிழன்பன் அவர்களுக்கு நன்றி.
இம் மரம் நடு விழா வரவேற்புரை நிகழ்த்தி, மரக்கன்றுகளைப்
பாதுகாப்பதை வலியுறுத்திய நம் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
மரம் நடு விழா ஏற்பாடுகளையும் மாணவர் கலை நிகழ்ச்சிகளையும் சிறப்பாகத்
தொகுத்து வழங்கிய ஆசிரியர் அமுதன் அவர்களுக்கு நன்றி.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பெருந்திரளாகக்
கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி.
விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய இருபால் ஆசிரியப்
பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் நன்றி.
மரக்கன்றுகளை வழங்கிய தொடக்க
வேளாண்மை அலுவலர் அவர்களுக்கும்
நன்றி. ஒரு கை தட்டினால் ஓசை வராது,
தனிமரம் தோப்பாகாது,
வாருங்கள் இணைந்து செயல்படுவோம். பாரதத் தாயின் மடியை பசுமை ஆக்குவோம்.