கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் தமிழ்க்கட்டுரை KAITHOLIL ONDRAI KATRUKOL TAMIL KATTURAI

 

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

முன்னுரை

வெறுங்கை என்பது மூடத்தனம்

விரல்கள் பத்தும் மூலதனம்  என்கிறார் கவிஞாயிறு தாராபாரதி. வாழும் வகை தெரிந்துவிட்டால் வாழ்க்கை இனிக்கும். கைத்தொழில் வாழக் கை கொடுக்கும்.

எண்ணிலாத்தொழில்கள்           

மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், நெசவுத்தொழில், பாய் பின்னுதல், கூடை முடைதல், ஆடுமாடுகோழி வளர்த்தல் போன்ற பல கைத்தொழில்கள் செய்யலாம். காட்டுப்பகுதியில் உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற தொழில்கள் செய்யலாம். பூவேலை, தையல், வண்ணப்பூச்சு போன்றவை பெண்களுக்கு ஏற்ற கைத்தொழில்கள் ஆகும்.

ஓய்விலும் வருமானம்

ஓய்வு என்பது தன் வேலையை மாற்றிச் செய்வதே. ஆம், வேளாண்மையே நம்நாட்டின் முக்கியத்தொழில். மூன்று முதல் ஆறு மாதங்கள் சோம்பிக்கிடக்காமல் குடிசைத்தொழில்கள் செய்து வருவாய் ஈட்டலாம். சிறுதானிய உணவு வகைகள், தின்பண்டங்கள், அப்பளம் தயாரித்தல் போன்றவை கிராமப்பகுதிகளுக்கான சிறுதொழில்கள்.

தன்கையே தனக்குதவி        WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ ? என்றார் நாமக்கல் கவிஞர். இயந்திரத்தின் உதவியின்றி தொழில்வளம் பெருக்கும் எளிய வழியே கைத்தொழில்கள். எப்பருவத்தினரும் ஓய்வு நேரத்தொழிலாய்ச் செய்து வருமானம் பார்க்கலாம்.

முடிவுரை               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மாணவப்பருவத்திலேயே கைத்தொழிலைக் கற்றுக்கொண்டால் நம்பிக்கை வளரும். நம் தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர் நோக்குவது அவச்செயலே என்றார் காந்தியடிகள். கைத்தொழில் கற்போம்! கவலையின்றி வாழ்வோம்!

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தயாரிப்பு  மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive