அழைப்பு மடல்
3, பாரதி
நகர்,
அருப்புக்கோட்டை.
27-01-20.
அன்பிற்கினிய
நண்பா, WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நான் இங்கு நலம், அதுபோல் அங்கு நீயும் உன்
பெற்றோரும் நலமா? இரண்டாம்
பருவத்தேர்வில் நான் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன்.
வரும் பிப்ரவரி 3ஆம் நாள் எனக்குப் பிறந்தநாள். அன்று மாலை எங்கள் இல்லத்தில் சிறு
விருந்து ஒன்று என் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அவசியம் நீ உன்
குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டும். என் பிறந்தநாள்
விழாவிற்கு வந்து நீ எனை வாழ்த்துவது எனக்கு மட்டற்ற
மகிழ்வைத் தரும்.
உன் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் நட்புடன்,
உன் அன்பு நண்பன்,
செ.பாலமுருகன்
உறைமேலிட்ட முகவரி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மு.முத்துமுருகன்,
61, தென்றல் நகர்,
கல்லூரணி.