மாதிரி பா நயம் பாராட்டல்
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
திரண்ட
கருத்து WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
கல், மலை,
பெருங்காடு, செடி, சமவெளி, மேடு இவற்றையெல்லாம் கடந்து ஏரி குளங்களை நிரப்பி
வந்தேன். ஊற்றில் உட்புகுந்து ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் என்று ஆற்றுநீர்
கூறுவதாகக் கவிமணி எழுதியுள்ளார். எங்கும் இறங்கி தவழ்ந்து வந்தேன் என்று
சமவெளிகளில் வேகம் குறைந்து - தவழ்ந்து – குறிப்பிடுகிறார். முற்றிலும் உட்புகுந்த
என்பதில் வறண்டு கிடந்த ஊற்றில் நிலத்தடி நீராய் இறங்கியதைக் கூறுகிறார்.
பொருள் நயம்
மழைநீரால்
ஆற்றில் குதித்து, கடந்து, தவழ்ந்து, ஏரி நிரப்பி, உட்புகுந்து, ஓடி வந்தேன் என
ஒரு பொருள் தரும் பல சொற்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
சந்தநயம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
எந்த நயம்
இல்லாவிட்டாலும் சந்தநயம் இருப்பது சிறப்பு. இப்பாடல் இசையமைத்துப் பாடுவதற்கு
ஏற்ப சந்தநயத்துடன் விளங்குகிறது.
தொடை நயம்
மோனை - குயவனின் கைவண்ணம் பானையிலே
புலவனின் கைவண்ணம் மோனையிலே
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கல் - காடு எல்லை - இறங்கி ஏறாத - ஏரி ஊறாத - ஓடை
எதுகை - எது கை கொடுக்காவிட்டாலும் எதுகை கை கொடுக்கும். இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
கல்லும் - எல்லை ஏறாத - ஊறாத
இயைபு - பாடல் அடிகளின் இறுதி எழுத்து
ஒன்றி வரத் தொடுப்பது இயைபு நயம்.
குதித்து, கடந்து, தவழ்ந்து, வந்தேன், வந்தேன்
அணிநயம் - இப்பாடல் கற்பனை நயம் கலந்த உயர்வு நவிற்சி அணி ஆகும்.
பாவகை - இப்பாடல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வகையைச் சார்ந்ததாகும்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மு.முத்துமுருகன், தமிழாசிரியர், கல்லூரணி, விருதுநகர் மாவட்டம்.