.
மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம்
அனுப்புநர்
பா.அன்பு,
3, காமராசர் நகர்,
கருப்பாயூரணி,
மதுரை.
பெறுநர்
மாவட்ட
ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட
ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்
– நூலகம் அமைத்துத் தருவது தொடர்பாக...
வணக்கம். நான் மதுரை அருகில்
உள்ள கருப்பாயூரணி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் ஏறத்தாழ ஆறாயிரம்
பேர் வசிக்கிறோம். பணிக்காகப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
அவர்களின் வேலை வாய்ப்பிற்காகவும் பொது அறிவைப் பெருக்கவும் செய்திகளை அறியவும்
எங்கள் ஊருக்கு நூலகம் ஒன்று அமைத்துத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பா.அன்பு.
இடம் – மதுரை,
நாள் – 11-12-2022.
உறைமேல் முகவரி –
பெறுநர்
–
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.