புத்தகம் கேட்டு உறவினருக்குக் கடிதம்
43, வடக்குத்தெரு,
மதுரை.
3 - 2 – 2020.
அன்பிற்கினிய
சித்தப்பாவுக்கு, WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தங்கள் அன்பு மகள் அகல்யா எழுதும்
மடல். நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீங்கள் அனைவரும் அங்கு நலமா? தங்களின் தமிழிதழ்ப் பணி எப்படி
இருக்கிறது? நான் இங்கு நன்றாகப் படித்து இரண்டாம்
பருவத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பள்ளி
நூலகம், பொது நூலகத்தில் இருந்து அவ்வப்போது புத்தகங்கள் எடுத்து என் வாசிப்பை
உயிர்ப்புடன் வைத்திருக்கிறேன். வரலாற்றுப் புதினங்கள் எழுதுவதில்
கல்கி அவர்கள் மிகச் சிறந்தவர் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பொன்னியின் செல்வன் படிக்க
ஆர்வமாய் உள்ளேன். வர்த்தமானன் பதிப்பகத்தில்
சலுகை விலையில் இந்நூல் அனைத்து பாகங்களும் கிடைப்பதாக அறிந்தேன். தாங்கள் ஊருக்கு
வரும்பொழுது எனக்காக இப்புத்தகத்தை வாங்கி வாருங்கள்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்றார் விவேகானந்தர். துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் மாவீரர் இலெனின். நானும் ஒரு படைப்பாளியாக வேண்டும். என்னைப் படிப்பாளியாக்க புத்தகத்தோடு வாருங்கள் என்று அன்புக் கட்டளை இடுகிறேன்.
என்றும் தங்கள் அன்பு மகள்,
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM க. அகல்யா.
உறைமேல்
முகவரி
ம.இளவரசு,
மக்கள் குரல் நாளிதழ், WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
எண் 1, முக்கியச் சாலை,
கோடம்பாக்கம்.
சென்னை – 24.