நன்றி மடல்
2-34, பாரதி
நகர்,
அழகாபுரி.
22-11-22.
அன்பிற்கினிய மாமாவுக்கு,
நலம், நாடுவதும் அதுவே. முதல் பருவத்தேர்வில்
நான் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். அதைத் தொடர்ந்து வந்த என்
பிறந்தநாளுக்குப் பரிசு அனுப்பினீர்கள். அதைப்பிரித்துப் பார்த்த எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சி. ஆம், அழகிய கைக்கடிகாரம். இரவிலும் ஒளிரும் தன்மை அதன் சிறப்பு. காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்து கடமை ஆற்ற எனக்கு இது பெரிதும் உதவுகிறது.
எதிர்வரும் இரண்டாம் பருவத்தேர்விலும் நான் முதல் மதிப்பெண் பெறுவேன்.
தங்களின் பிறந்தநாள் பரிசுக்கு என் நன்றியை
உரித்தாக்குகிறேன்.
என்றும் நன்றியுடன்,
தங்கள் அன்பு
மருமகன்,
அ.எழிலன்.
உறைமேலிட்ட முகவரி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மு.முத்துமுருகன்,
61, தென்றல் நகர்,
கல்லூரணி.