கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

நான் விரும்பும் நூல் - திருக்குறள் NAAN VIRUMPUM NOOL THIRUKKURAL MY FAVORITE BOOK TAMIL KATTURAI

 

.

நான் விரும்பும் நூல் - திருக்குறள்

முன்னுரை

                கணக்கிலடங்கா நூல்கள் தோன்றியிருந்தாலும்  நிலைத்து நிற்கும் நூல்கள் சிலவே. அவற்றுள் நான் விரும்பும் நூல் திருக்குறள் ஆகும். பழைமையும் பெருமையும் வாய்ந்த திருக்குறள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நூல் அமைப்பு

                திருக்குறள் குறள் வெண்பாவால் எழுதப்பட்ட நூலாகும். அறம், பொருள், இன்பம் என்று முப்பாலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு 10 குறள்களாக 1330 குறள்களையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பு என்னைக் கவர்ந்த ஒன்றாகும்.

உலகப்பொதுமறை

                திருக்குறள் மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான ஒரு நூலாகும். மனிதர்கள் அனைவருக்குமான அறக்கருத்துகளைக் கூறும் நூல் என்பதால் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூல் அனைவருக்கும் பொது என்பது மிகச்சிறப்பானது.

எளிமை

                திருக்குறள் இரண்டு அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் சிறப்பானது. எளிய சொற்களால் அரிய பல கருத்துகளை அள்ளித் தரும் அற நூல். உயரிய நோக்கத்துடன் எழுதப்பட்ட எளிய நூலாக நிலைத்திருக்கும் குறளின் சிறப்பு பெருமைக்குரியது.

அரிய கருத்துகள்

                திருக்குறள் அரிய பல கருத்துகளைக் கூறுகிறது. அன்பின் வழியது உயிர்நிலை என்றும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்றும் கல்லாதவர் விலங்காவார் என்றும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் கூறுகிறது.

சிறப்புகள்

                திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பைப் பெற்றுள்ளது. பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். இன்றும் பல மேடைகளில் எடுத்தாளப்படக்கூடியது. பொய்யா மொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், முப்பால், உத்தரவேதம் எனப் பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

முடிவுரை

                திருக்குறள் அகர முதல என்று அ வில் தொடங்கி முயங்கப்பெறின் என்று ன் இல் முடிவடைகிறது. இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்று, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக உள்ள திருக்குறளே நான் விரும்பும் நூலாகும்.

 

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive