கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

தண்ணீர் 9ஆம் வகுப்பு துணைப்பாடக் கட்டுரை THANNEER 9TH THUNAIPADA KATTURAI

 

தண்ணீர்

முன்னுரை                                   

தண்ணீரின் இன்றியமையாமையையும் தேவையையும் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்கள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாகச் சிற்றூர்களில் இந்த நெருக்கடி வாழ்க்கைச் சிக்கலாகவே மாறிவருகிறது. இதை நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் கந்தர்வன் அழகுற எழுதியுள்ளார்.

கெட்டிப்பெண் இந்திரா                  

சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்து குபேரன் ஆகும் கணக்குப்போடும் ஐயா. மூன்று மைல் தூரத்தில் உள்ள  பிலாப்பட்டி சென்று தண்ணீர் எடுக்க இயலாத வயிற்றில் கட்டி வந்த அம்மா. இவர்களுக்கு நடுவே வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் தன் ஊர் தண்ணீர்ப்பஞ்சம் காரணமாக குடம் ஏந்தி ரயில் வண்டியில் தண்ணீர் பிடிக்க ஓடும் இந்திரா. பொட்டுத்தண்ணியில்லை, பிலாப்பட்டிக்கு மூன்று மைல் தூரம் நடக்க வேண்டும், அரைச்செம்பும் கால்செம்புமாய் முகம் கழுவும் குழாயை அழுத்திப் பிடித்தபடி குடம் நிறைத்து எடுத்து வரவேண்டிய கட்டாயம். மறுநாள் மாலை வரை இதைத்தான் வீட்டில் உள்ளோர் குடிக்கவும், சோறு பொங்கவும் வேண்டும்.

சொட்டுத்தண்ணீருக்கும் முட்டுக்கட்டை          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பிலாப்பட்டிக்காரர்கள் ஊருணிக்கரையில் உள்ள கிணற்றுநீரை மதியம் வரை ஊற ஊற இறைப்பார்கள். பிறகுதான் பக்கத்து ஊர்க்காரர்களுக்கு வாய்ப்பு. எனவே அங்கு சென்று திரும்பினால் பொழுது சாய்ந்துவிடும். பச்சைக்கொடியோடும் வெள்ளை உடையோடும் இவர்கள் ரயிலில் தண்ணீர் பிடிப்பதை விரும்பாத ஸ்டேசன் மாஸ்டர். ஸ்குவார்டை வரச்சொல்லி ஜெயிலில் போட்டுவிடுவாரோ என்ற பயம். பக்கத்து ஊர் பாய்ண்ட்ஸ்மேன் மட்டுமே இவர்களுக்கு ஆதரவு.

கந்தர்வனின் சொல்லோவியம்                      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

குடங்களைத் தூக்கிக் கொண்டு புயல் நுழைவதுபோல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். ரயில் காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது. உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டு வருகிற உப்பு. ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை. சனிக்கிழமைகளில் எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும் நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில். முல்லை மணந்த நந்தவனக் கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள் என்ற சொல்லாடல்கள் அவலச்சுவையிலும் பாலைக் கவிதைச் சோலையெனத் தெரிகிறது.                 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

வீட்டாரின் பதற்றமும் பதறாத இந்திராவும்

அன்று ஊதல் ஒலி கேட்டும் பானை நிறையாத காரணத்தால் தண்ணீரை அரைச்செம்பும் கால்செம்புமாய் இந்திரா பிடித்துக் கொண்டிருக்க ரயில் கிளம்பிவிட்டது. அக்கா இன்னும் வரலை என்ற சின்னவனின் எச்சரிக்கைக்கு எங்கெயாவது வாயளந்திட்டிருக்கும் என்றார் ஐயா. அம்மாவோ ரயிலைப்பிடிங்க என்றார் பதற்றத்துடன். உற்றார் உறவினர் பஸ் பிடித்து இராமநாதபுரம் சென்று சல்லடையாய்ச் சலித்தும் இந்திராவைக் காணவில்லை. திசை தெரியாம எந்த ஊருத்தண்டவாளத்தில் விழுந்து கெடக்கோ என்று புலம்பியபடி தண்டவாளத்தின் ஓரத்தில் ஓட ஐயா தொடர்ந்தார். அப்போது இடுப்பில் தண்ணீர்க்குடத்துடன் எதிர்ப்பட்டாள் இந்திரா.

முடிவுரை                             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்கள்? என்பது நம் சமுதாயத்தை நோக்கிக் கந்தர்வன் கேட்கும் கேள்வி.                                              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பயமகளே இதையும் சொமந்துக்கிட்டா வரணும் இத்தனை மைலுக்கும்? என்று கலங்கிய தாயாருக்கு, ஊக்கும் நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது? என்று இந்திரா சொல்வது நாளைக்கான எச்சரிக்கை.

  WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                - தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive