கடிதம்
எழுதுதல்
7 பாரதி தெரு,
விருதுநகர்.
3 – 10 – 19.
அன்பிற்கினிய கவிதாவுக்கு,
அன்புத் தம்பி முத்து எழுதும் மடல். இங்கு நாங்கள் அனைவரும் நலம். அங்கு நீங்கள் நலமா ? காலாண்டுத் தேர்வு சிறப்பாக முடிந்தது, நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.
சென்ற வாரம் ஒரு இனிமையான நிகழ்வு
நடந்தது, அதைப் பகிர்கிறேன், கேள் !
பள்ளி நேரம் முடிந்ததும் மாலை
நேரம் விடுதிக்குச் சென்று உடை மாற்றிவிட்டு விளையாட்டுத் திடலுக்குச் சென்று மெது
ஓட்டம் ஓடிய போது என் பார்வையில் பட்டது ஒரு பணப்பை. ஆம், எங்கள் பள்ளியில்
இன்று இயலாக் குழந்தைகளுக்கான மருத்துவ
முகாம் நடைபெற்றது. அதற்கு வந்த பெற்றோர்
எவரோ ஒருவர் தான் இப்பணப்பைக்குச் சொந்தக்காரர் என அறிந்தேன்.
பணப்பையை எங்கள் உடற்கல்வி ஆசிரியர் மூலம் தலைமையாசிரியர் வசம் ஒப்படைத்தேன்.
என் நேர்மையைப் பாராட்டினர் ஆசிரியர்கள்.
உரியவரிடம் பணப்பை
சென்று சேர்ந்ததும் ஓடோடி வந்தார் எனைக்காண.
உச்சிமுகர்ந்து மெச்சி மகிழ்ந்தார். உன்னைப்
பெற பெற்றோர் என்ன தவம் செய்தனரோ என்றார். அகம் மகிழ்ந்தேன்,
அன்பில் நெகிழ்ந்தேன். ஆசைப்படாமல் அவரவர்க்குரியது அவருக்கே என நம் தந்தை சொற்படி நடந்த எனக்குக்
கிடைத்த பாராட்டு இது. உன் தம்பியாய் உளம் மகிழப் பகிர்ந்தேன். வாழ்க வளமுடன்.
அன்புத்
தம்பி,
ச.முத்து.
உறை
மேலிட்ட முகவரி
ச.கவிதா,
மேலாளர்,
இந்தியன் வங்கி,
திண்டுக்கல். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM