மருவூர்ப்பாக்க வணிக வீதிகளும்
இன்றைய அங்காடிகளும்
சோழ
நாட்டில் புகார் நகரின் மருவூர்ப் பாக்க வணிக வீதிகளைக் கண்முன் நிறுத்தி, இன்றைய
அங்காடிகளை ஒப்புநோக்குகிறேன்.
அங்கே
வண்ணக் குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணம் வீசும் சந்தனம், பூ, அகில்
விற்கிறார்கள். இங்கே வீடுகளை உள்ளும் புறமும் வண்ணமயமாக்க பெயிண்ட் விற்கிறார்கள். மணம் வீச
வாசனைத் திரவியங்கள் வேதிப் பொருள்கள் கலக்கப்பட்டு, புட்டிகளில் விற்பனையாகின்றன.
அன்றும் இன்றும் பூக்கடைகள் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பட்டு,
பருத்தி, முடி இவற்றால் ஆன ஆடைகளைக் காருகர் அங்கே விற்கின்றனர். இங்கே மொத்தக் கடைகளும்
சில்லரைக் கடைகளும் ஆயத்த ஆடைகளை விற்கின்றன. செயற்கைப் பட்டு, செயற்கை இழை ஆடைகளே
அதிகம் இங்கு. முத்தும் பொன்னும் மணியும் அளவிடற்கரியது அன்று, இன்றோ வைரங்களும் பொன்னும் மணியும்
கண்ணாடிப் பேழையில் வைத்து விற்கப்படுகின்றன. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அகண்ட வீதிகளில்
எண் வகைத் தானியங்கள், பிட்டு, அப்பம், மீன், உப்பு, வெற்றிலை, ஏலம் முதலான
நறுமணப் பொருள்கள் விற்கப்பட்டன அங்கு. இங்கு ஆயத்த உணவுகள் பொட்டலங்களில்
விற்கப்படுகின்றன. பழக்கூடைகள் மிகுந்து இருக்கின்றன. பிட்டு, அப்பம் மாறி சோளப்பொரியும் பஞ்சு
மிட்டாயும் வந்துவிட்டன. வெண்கலம், இரும்பு, மரம், பொம்மைகள், தோல் பொருள்கள்
என பாத்திரக்கடைகள் அன்று. இன்றோ எவர் சில்வர், அலுமினியம், பித்தளை இவற்றோடு உயரழுத்த சமையற்கலன்கள் விதவிதமாய் விற்கப்படுகின்றன. கள் தடைசெய்யப்பட்டு ஆல்கஹால் விற்கப்படுகிறது. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஏழிசை
முழங்கும் குழலும் யாழும் அங்கு. இங்கு கீபோடு, ட்ரம்ஸ் பேடு போதும் அத்தனை இசையையும் முழங்குகிறது. கைத் தொழில் செய்வோர், ஏவல்
செய்வோர் எனக் கூட்டம் அங்கு. இரவைப் பகலாக்கும் ஒளிவெள்ளம் பரவ அல்லங்காடிகள் அடுக்கு மாடிகளில்
பல்பொருள் அங்காடிகளாக இன்று. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM