நான்
விரும்பும் கவிஞர் – பாரதியார்
முன்னுரை
அச்சமில்லை அச்சமில்லை என்று, தம் கவிதைகள் மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை
ஊட்டிய மகாகவி பாரதியாரே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம்.
இளமைப்பருவம்
தூத்துக்குடி
மாவட்டம் எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி
அம்மையார் ஆகியோருக்கு 11-12-1882
அன்று பாரதியார் பிறந்தார். பைந்தமிழ்ப் பாவலராய்த்
திகழ்ந்து பாரதி என்னும் பட்டம் பெற்றார். பாரதி என்ற சொல்லுக்கு கலைமகள் என்று
பொருள்.
பாரதியின் குடும்பம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பாரதியார்
1897 ஆம்
ஆண்டு செல்லம்மாள் என்பவரை
மணந்தார். பாரதியாருக்கு, தங்கம்மாள், சகுந்தலா என்ற இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.
விடுதலை வேட்கை
ஆயிரம்
உண்டிங்கு சாதி எனில்
அந்நியர்
வந்து புகலென்ன நீதி
என்று வீர முழக்கம் செய்தவர் பாரதியார். கவிதைகளாலும்,
கட்டுரைகளாலும் விடுதலை வேட்கையைத் தூண்டினார். கேலிச்சித்திரம் மூலம்
பாமரருக்கும் புரியும் வண்ணம் கருத்துகளை விதைத்தார். கவிஞராகவும்
இதழாசிரியராகவும் விடுதலைக்கு உழைத்தவர் பாரதியார்.
சமுதாயத்தொண்டு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பதன் மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர்
பாரதியார். குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்கிறார் மகாகவி. பெண்விடுதலைக்கும் நாட்டு
விடுதலைக்கும் தொண்டாற்றியவர் பாரதியார்.
இயற்றிய நூல்கள்
பாரதியார்
பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, ஞானரதம்,
புதியஆத்திசூடி, சந்திரிகையின்கதை, தராசு போன்ற
நூல்களை இயற்றியுள்ளார்.
சிறப்புப்பெயர்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பாரதியார், முண்டாசுக்கவிஞன், மகாகவி, சக்திதாசன் என்று சிறப்புப் பெயர்களால் வழங்கப்பட்டார். கவிஞராக,
செய்தியாளராக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, தமிழாசிரியராக விளங்கியவர்
பாரதியார்.
முடிவுரை
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று புகழப்பெற்ற பாரதியார் 11-09-1921 அன்று
இம்மண்ணைவிட்டு மறைந்தார். ஆனால் அவரின் புகழ் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்.
* செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம்.