நண்பனுக்குக் கடிதம்
7, பாரதியார் தெரு,
மதுரை.
26-07-2019.
அன்புள்ள
நண்பா,
நானும்
என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக
இருக்கிறீர்களா ? நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு
நன்றாகப் படிப்பாய் என்று எண்ணுகிறேன்.
கடந்த
வாரம் நான் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி
சென்றேன். அதிகாலையில் சூரிய உதயம் பார்த்து மகிழ்ந்தோம். முக்கடல் சங்கமிக்கும்
அழகைக் கண்டு ரசித்தோம். வள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் படகில்
சென்று பார்த்தோம். காந்தி மண்டபம், காமராசர் மண்டபம் சென்று அரிய பல செய்திகளை
அறிந்தோம். மாலையில் சூரியன் மறைவு கண்டு திரும்பினோம். வாய்ப்பு கிடைத்தால்
நீயும் கன்னியாகுமரி சென்று வா.
என் கடிதம்
கண்டு நீ அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழன்,
அ.முகிலன்.
உறை
மேல் முகவரி –
திரு.ப.எழிலன்,
5, கம்பர் தெரு,
சென்னை.
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.