கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

நல்லாசிரியர் இலக்கணம் நன்னூல் பாடலும் விளக்கமும் - BEST TEACHER NANNOOL SONG

 குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே. - நன்னூல் 26

நல்லாசிரியர் இலக்கணம் என்பது ஒரு நூல் இயற்றும் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் எவையென்று நன்னூல் வரையறை செய்துள்ள பட்டியலாகும்.

குடிப்பிறப்பு, 

அருளுடைமை,
கடவுள் பத்தி ஆகிய மேன்மைகளும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த அறிவும், 

தாம் கற்றவற்றை பிறருக்கு எடுத்துக் கூறும் சொல் வன்மையும், 

பூமி, மலை, துலாக்கோல், மலர் ஆகியனவற்றின் தன்மைகளும், 

உலகியலறிவும், 

உயர்ந்த குணங்களும் 

உடையவனே நூல் உரைக்கும் ஆசிரியன் ஆவான்

தமிழ்த்துகள்

Blog Archive