மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல்
வெற்றியின் நாயகரே வருக !
சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீ அதனை
நித்தநித்தம்
பேணுவையேல்
நீண்ட
ஆயுள் பெறுவாயே ! என்கிறார் கவிமணி. கல்வி மாவட்டம் எங்கும்
சூறாவளியாய்ச் சுழன்று
பள்ளிகளில் தூய்மை பேணுவதின் அவசியம்
உணர்த்திய பண்பாளரே !
சுற்றுச்சூழலைப் பேணுவதில் மாவட்ட அளவில் எப்பள்ளி சிறந்தது என
எம்மைத் தூண்டிவிட்டு
துன்பம் நீக்கிய அன்பாளரே ! இப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எம்
பள்ளிக்கு விருது வழங்க வரும் வெற்றியின் நாயகரே வருக ! வருக ! WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
விழிப்புணர்வின் சிகரமே !
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்! தலைவன் எட்டடி பாய்ந்தால் தொண்டன் பதினாறடி பாய்வதில்
வியப்பென்ன இருக்கிறது ? எரிகின்ற
விளக்கின் தூண்டுகோலாக இருந்து மற்றவர் புருவம் உயர இவ்வெற்றியை எமக்குக்
கிடைக்கச் செய்த இமயமே ! அன்பின் சிகரமே ! சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியாகும் என்று கூறி எமை விழிப்புணர்வு கொள்ளச் செய்த வெற்றியின்
சிகரமே வருக ! வருக !
இயற்கையின் பாதுகாவலரே ! WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
உங்கள் தாயோ உங்களைப் பத்து மாதம் தான் சுமக்கிறாள்
நானோ ஆயுள் முழுதும் சுமக்கிறேன்.
பெற்றவளே உன்னைப் பிணம் என்று ஒதுக்கும் போதும்
என் வயிறு உன்னை ஏற்றுக் கொள்கிறது என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். இயற்கை அன்னை நம் கையில் தந்திருப்பது அட்சய பாத்திரம். அதைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடாதீர் என்று எம்மை
எச்சரித்தீர் ! குப்பைகளைக் கண்ட இடத்தில்
போடாமல் சிவப்பு, பச்சை, நீல நிறக் குப்பைத் தொட்டியில் போடுவதற்கு ஊக்குவித்தீர் ! தலைமையாசிரியர், ஆசிரியப் பெருமக்களைப் பாராட்டி
சுற்றுச்சூழல் பேண ஆர்வமூட்டினீர். இயற்கையின் பாதுகாவலரே வாரீர் ! வாரீர் !
சுற்றுச்சூழல் ஆர்வலரே ! WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நிலம், நீர், காற்று, தீ, வளி என்று ஐம்பூதங்களும் நிறைந்த உயிர்க்கோளம் பூமி. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது எனக் கருதி பள்ளிப் பிள்ளைகள் மனதில் சுற்றுச்சூழலை மாசறப்
பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினீர். பசுமரத்தாணியாய் அவர் மனதில்
இது எம் பள்ளி ! எம்பள்ளியால் எமக்குப் பெருமை! எம்மால்
பள்ளிக்குப் பெருமை என்று உணர வைத்தீர். இளம்
வயதிலேயே இயற்கையோடு இயைந்த வாழ்வின் அவசியத்தை உணரச் செய்தீர். மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பேணிப் பாதுகாக்கும்
பள்ளிக்குப் பரிசு என்று அறிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலரே வருக ! வருக ! WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
என்றென்றும் நன்றியுடன்,
மாணவ மாணவியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM ம.ரெட்டியபட்டி.
நாள் – 03-02-2021
இடம்- ம.ரெட்டியபட்டி.