கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா உரை NSS CAMP OPENING SPEECH

 

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

தொடக்க விழா உரை

என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் வீரத்துறவி விவேகானந்தர். அவர் சாதாரண இளைஞர்களைக் கேட்கவில்லை. எஃகினும் நரம்பு முறுக்கேறிய இளைஞர்களைக் கேட்டார். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். ஆம் சுவரில்லாமல் சித்திரம் எழுத முடியுமா ? உடல் உழைப்பே கேவலம் என்று எண்ணும் கணினிக் காலம் இது. ஆம், கலிகாலம். இங்கே குழுமியிருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை நேதாஜியின் போர்ப்படை வீரர்களாய், காந்திஜியின் சத்திய வழித் தொண்டர்களாய்ப் பார்க்கிறேன். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா! என்று பாரதியின் பாடலைப் பாடி உங்களை வரவேற்கத் தோன்றுகிறது எனக்கு. வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள் நாட்டைக் காக்க என வேந்தன் கட்டளையிட்ட போது தந்தையையும் கணவனையும் இழந்த பெண் தன் பச்சிளம் குழந்தையின் கையில் வேல் எடுத்துக் கொடுத்து வெற்றித் திலகமிட்டு அனுப்பினாராம் புறநானூற்று வீரத்தாய். வீரத்தாயின் மைந்தர்களாக உங்களை நான் பார்க்கிறேன்.      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மரக்கன்றுகள் நடுதல், சுகாதார விழிப்புணர்வு, நெகிழிக் குப்பைகள் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தல், பெண் கல்வி, பெண் விடுதலை, பொது அறிவு வளர்த்தல், தொற்றுநோய், குருதிக்கொடை, மருத்துவ முகாம் மூலம் சேவை, நாடகங்கள், பாடல், பேச்சு மூலம் மக்களிடையே பள்ளியைக் கொண்டு செல்லும் அற்புதப் பணியாற்றக் களம் இறங்குகிறீர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் திருநாவுக்கரசர். இந்த ஏழு நாள்களும் உங்கள் வாழ்வில் வானவில்லாய் ஒளிரட்டும். உங்கள் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இனி இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.


தமிழ்த்துகள்

Blog Archive