சும்மா கிடைக்கவில்லை சுதந்தரம்
அன்னைத்தமிழே,
அருளோவியமே, என்னை இங்கு பேச வைத்த தாயே, உன்னை வணங்கித் தொடங்குகிறேன் அருள்வாயாக !
ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அந்நியர்
வந்து புகல் என்ன நீதி ? என்றார் மகாகவி பாரதி. அன்னை பாரதம் வடக்கு என்றும் தெற்கு
என்றும் மாறுபட்டுக்கிடந்தது. அதனுள்ளும் கூறுபட்டுக்கிடந்தது. வாணிகம் செய்ய வந்த
வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். சுயநலம் கொண்ட சில புல்லுருவிகள்
வெள்ளையருக்கு உதவினர். காலம் உருண்டோடியது. அன்னை நாட்டின் வளம் அந்நியரால்
சுரண்டப்பட்டது. அடிமை வாழ்வில் அடியும் உதையும் கிடைத்தது. இம் என்றால்
வனவாசம், ஏனென்றால் சிறைவாசம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. காந்தியடிகள் தலைமை ஏற்றபின் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான அறப்போர் தீவிரம் அடைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்றார் நாமக்கல் கவிஞர்.
அக்கா அக்கா என்றே நீ அழைத்தால் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
சுக்கா
மிளகா கொடுக்கச் சுதந்தரம் கிளியே ! என்றார்
பாவேந்தர் பாரதிதாசன். செக்கிழுத்தார் கல்லுடைத்தார் வ.உ.சி. சுதேசி நாவாய் சங்கம் மூலம் கப்பல் விட்டார். காந்தியடிகள்
தண்டியிலும் ராஜாஜி வேதாரண்யத்திலும் உப்புக்காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.
கொடி காத்த குமரனின் மரணம் ஏழை எளிய மக்களுக்கும் விடுதலைக் கனலை
மூட்டியது. மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற இரண்டு பிரிவுகளில் பிரிந்து திலகரும் கோகலேயும் மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கை கோக்க
வைத்தனர்.
ஆடுவோமே
பள்ளு பாடுவோமே WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஆனந்த
சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று கூத்தாடினார் பாரதி.
சட்டமறுப்பு
இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என தீவிரம் அடைந்தது
போராட்டம். நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை பர்மாவில் அமைத்து டெல்லி சலோ என்று விரைந்தார். செய்,
அல்லது செத்து மடி என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது.
போராட்டத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தமானுக்கும் பினாங்குக்கும் நாடு
கடத்தப்பட்டனர் பலர். சரோஜினி நாயுடு, டாக்டர் முத்துலட்சுமிரெட்டி என கஸ்தூரிபாகாந்தியுடன் கைகோத்தனர் பெண் தலைவியர்கள். முகமது அலி ஜின்னா தனிநாடு கோரினார். இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. கிளமண்ட் அட்லி தலைமையில் இந்தியாவுக்கு விடுதலை அளிக்க
வெள்ளையர் முன்வந்தனர். மௌண்ட் பேட்டன்
பிரபு கடைசி கவர்னர் ஜெனரலானார். 1947 ஆகஸ்ட் 14 இல் பாகிஸ்தானுக்கும் 15 இல்
இந்தியாவுக்கும் விடுதலை அறிவிக்கப்பட்டது.
இன்று
நாம் சுவாசிப்பது விடுதலைக்காற்று. அதில் உயிர் நீத்த நம் தியாகிகளின் சுவாசம்
கலந்திருக்கிறது. அவர்கள் சிந்திய ரத்தமும் வியர்வையும் தான் நம்முடைய
புன்னகைக்குக் காரணம்.
தண்ணீர்
விட்டா வளர்த்தோம் சுதந்திரப்பயிரை
கண்ணீராற்
காத்தோம் கருகத்திருவுளமோ ? WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பெற்ற சுதந்தரத்தைப்
பேணிக்காப்போம்! ஜெய்ஹிந்த் !
மு.முத்துமுருகன்,
தமிழாசிரியர், அரசு
மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.