தேசிய ஒருமைப்பாடு
முன்னுரை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –
நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும்
தாழ்வு ஆம், வணிகம் செய்யவந்த
அன்னியரால் அடிமைப்பட்டோம், சாதி,மத,இன,மொழி வேற்றுமையால் பிரிவுற்றோம். பின்னர் ஒன்றுபட்டோம், வென்று காட்டினோம், தேசிய ஒருமைப்பாட்டின் வலிமை உணர்ந்தோம்.
வேற்றுமையுள் ஒற்றுமை
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், பல மதங்கள். பல இனங்கள், பல்வேறு
சாதிப்பிரிவுகள். மொழியால், மதத்தால், இனத்தால், சாதியால் பிரிந்தாலும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை
கண்டு உலகநாடுகள் வியக்கின்றன.
ஒருமைப்பாடு வளர்ப்போம்
தேசியச்சின்னமான நான்முகச் சிங்கம், தேசியக்கொடியான மூவண்ணக்கொடி,
தேசியப்பாடலான ஜனகணமன எல்லாம் நம் மக்களால்
மதித்துப் போற்றப்படுகின்றன. தேசிய விழாக்கள், விடுதலைப்போராட்ட
வீரர்களின் பிறந்தநாள், நினைவுநாளை அனைவரும் கொண்டாடிவருகிறோம்.
முடிவுரை
இந்திய அரசியல் சட்டத்தை
மதிக்கிறோம், கடமையைச் செய்கிறோம், உரிமையைப் பெறுகிறோம். எல்லையில் காவல் நின்று காக்கும்
முப்படைகளின் தியாகத்தை மதிக்கிறோம்.
பாரத நாடு பழம் பெரும்
நாடு
நீரதன் புதல்வர்
இந்நினை வகற்றாதீர் என்ற
பாரதியின் வரிகளைப் பாடுவோம்!