பயணங்கள் பல வகை
முன்னுரை
சக்கரம் கண்டுபிடித்த பிறகு மனிதன் தொடங்கிய பயணம் இன்னும் உருண்டு கொண்டே இருக்கிறது. இன்றைய நாகரிக உலகில்
அவசியத் தேவை ஆகி விட்ட பயணங்கள் பல வகை ஆகும்.
பயணத்தின் தேவை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில்
படகினைக்
கண்டான் மனிதன். கல்வி, தொழில், வணிகம்,
தட்பவெப்பநிலை, போர்கள் காரணமாக மனிதன் பயணம் செய்கிறான். தரை வழி, நீர் வழி, வான் வழி
என மூவகையில் பயணங்கள் மேற்கொள்கிறான்.
தரை வழிப் பயணம்
காலால் நடந்து இடம்பெயர்ந்தான் மனிதன். பாதை சாலையாகி நெடுஞ்சாலைகள் உருவானது. களைப்புத் தெரியாமல் செல்ல மாட்டு வண்டி, குதிரை வண்டி, மிதிவண்டி, விசையுந்து, மகிழுந்து, சிற்றுந்து, பேருந்து எனப் பல வண்டிகள் வந்துவிட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப்பின் சரக்குந்துகளில் மட்டுமே
சென்ற பொருள்கள் இருப்புப் பாதைகள்
மூலம் தொடர் வண்டிகளில் வந்து இறங்கின.
கடல் வழிப் பயணம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
திரைகடலோடியும்
திரவியம் தேடு என்றனர் நம் முன்னோர். கிரேக்கம், உரோம், சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பை கடல்வழியே கொண்டிருந்தனர் பழந்தமிழர். உலகு
கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் – அகநானூறு. காலின்
வந்த கருங்கறி மூடையும் நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் - பட்டினப்பாலை
என்ற இலக்கிய வரிகள் நம் கடல் வணிகம் குறித்து
விளக்குகின்றன. கட்டுமரம் முதல் பெரிய கப்பல்கள் வரை கொண்டிருந்தனர் நம் முன்னோர். இராசேந்திரசோழன் அக்காலத்தே கடற்படை வைத்திருந்தான். இன்று குட்டித்தீவுகளாய்
மிதக்கின்றன கப்பல்கள். திமிங்கலங்களாய் நீந்துகின்றன நீர்மூழ்கிக் கப்பல்கள்.
வான்வழிப் பயணம்
வலவன் ஏவா வானூர்தி – புறநானூறு. காற்றையும்
ஒளியையும் மிஞ்சும் வேகத்தில் விமானங்கள் வந்துவிட்டன. ஏவூர்திகள் செயற்கைக்கோள்களைத் தாங்கி விண்வெளியில் பறக்கின்றன. உலகம் சுருங்கி விட்டது.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்றும். வானை அளப்போம் விண்மீனை அளப்போம் என்றும் பாரதியார் கூறினார். பிற கோள்களில் மனிதன் குடியேறும் நாள் நெருங்கிவிட்டது.
உலகமயமாதலுக்கு உதவிய பயணங்கள் பண்பாட்டு பகிர்வுக்கு வழிவகை செய்கின்றன. பயணம்
செய்வோம் உலகில் மூலைமுடுக்கெல்லாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
தயாரிப்பு மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ம.ரெட்டியபட்டி, விருதுநகர்
மாவட்டம்.